Adi Rasathi Song Lyrics
| Movie Name | Music Video |
| Song Name | Adi Rasathi |
| Actors | ——- |
| Music | Kavin Muthukumar |
| Singers | Kavin Muthukumar |
| lyricist | Rabin Raj |
| Movie Release date | 2024 |
Adi Rasathi Song Lyrics in Tamil
பன மர குருத்துல
பானைய கட்டுறேன்
பதனி தான் நிரம்புது
பாதையும் மாறுது
அடி ராசாத்தி அடி ராசாத்தி
அடி ராசாத்தி
என் உடம்பில் நீ பாதி
போரயவும் கூரு கத்தி
கண்ணால என தீட்டி
விரட்டி விரட்டி வாரண்டி
தள்ளி விட்டு போகாத
முட்ட முட்ட கண்ணால
முட்டி என்ன சாய்க்காத
அடி ராசாத்தி
என் உடம்பில் நீ பாதி
போரயவும் கூரு கத்தி
கண்ணால என தீட்டி
தூறலும் போடுது
மயிலும் ஆடுது
கருமேகம் மேற்க்க சூழுது
படபடவென நெஞ்சம் துடிக்குது
ராசத்தி அழக கண்டது
பொழுது விடிஞ்சா கிளம்பி போற
வழியனுப்ப நானும் வாறேன்
பொழுது மறஞ்சும் காத்து கிடந்தேன்
சோறு நினப்ப நானும் மறந்தேன்
வாச தெளிக்க வந்த நேரம்
ரொம்ப அழகா மாறிப்போகும்
தூது ஒன்னு நானூம் சொல்ல
பதில நீயும் சொன்ன போதும்
காதல நீ சொன்ன போதும்
அடி ராசாத்தி
என் உடம்பில் நீ பாதி
போரயவும் கூரு கத்தி
கண்ணால என தீட்டி
ஹே ராசாத்தி
என் உடம்பில் நீ பாதி
போரயவும் கூரு கத்தி
கண்ணால என தீட்டி
கனவு கண்டே காலம் ஓட்டுறேன்
உன்ன நினச்சி வெக்கப்பட்டு சிரிக்கிறேன்
நட்ட நடுவில் நிலவிடம் பேசுறேன்
உன்னால பொலம்பி கிடக்கிறேன்
கரிசக்காட்டு கரும்பா இருக்குறா
பரிசம் போட தவியா தவிக்கிறேன்
பக்கம் வந்தா விலகி நிக்கிற
உன்னோட சேர துடிக்கிறேன்
கரிசக்காட்டு தூசி போல
என்ன வீசி போற
பொன்னு கேட்டு நானும் வாறேன்
என்ன எறிஞ்சி பேசிடாத புள்ள
என்ன எறிஞ்சி பேசிடாத
அடி ராசாத்தி
என் உடம்பில் நீ பாதி
போரயவும் கூரு கத்தி
கண்ணால என தீட்டி
அடி ராசாத்தி
என் உடம்பில் நீ பாதி
போரயவும் கூரு கத்தி
கண்ணால என தீட்டி