Amma Amma Song Lyrics in Tamil | Ranam Aram Thavarel

Amma Amma Song Lyrics

Movie NameRanam Aram Thavarel
Song NameAmma Amma
ActorsVaibhav, Nandita Swetha, Tanya Hope
MusicArrol Corelli
SingersPraniti
lyricistSherief
Movie Release date23.02.2024

Amma Amma Song Lyrics in Tamil

அம்மா அம்மா ஆச நிலவா

அன்பத் தருவாளே அவளும் அழகா

அம்மா அம்மா என் பாச முகிலா

மழைய பொழிவாளே தீரா அளவா

 

வீழும் போதெல்லாம்

தாங்கும் விழுதானேன்

வரமாய் உன கேட்பேன்

வாழ்வின் முதலாய்

 

தேம்பும் பொழுதெல்லாம்

தென்றல் காத்தானேன்

வருவாய் எனை தேத்த

விண்மீன் மலராய்

 

அன்பின் குரலானேன்

இருளில் ஒளியானேன்

உயிர் சுமை உணர்ந்தேனே

உந்தன் மார்பில்

 

அம்மா அம்மா ஆச நிலவா

அன்பத் தருவாளே அவளும் அழகா

 

அன்பின் சுவையோ

அவள் விரல் ஊட்டும் அன்னம்

தெரிந்தே அவள் கடிப்பாள்

பொய்யாய் என் கண்ணம்

 

தேய்பிறை காணாத

முழுமதி முகம் மின்னும்

என் மனம் தினம் ஏங்கும்

உன் மடி சுகம் ஏகம்

 

எந்தன் முதல் முத்தம் நீயே அம்மா

உன் நிழலில் வளரும் மீன் அம்மா

கருவில் உனதானேன் நான் அம்மா

என் முகம் உன் மேலும் செல்லம்மா

 

நிலமென்று உன்னையே

அணைத்துக் கொள்வேன் உன்னையே

ஆரி ராரி ராரோ

 

அம்மா அம்மா ஆச நிலவா

அன்பத் தருவாளே அவளும் அழகா

அம்மா அம்மா என் பாச முகிலா

மழைய பொழிவாளே தீரா அளவா

 

YouTube-Links

Leave a Comment