Ennai Kandavare Song Lyrics
Movie Name | Christian Devotional Song |
Song Name | Ennai Kandavare |
Music | Shamgar Ebenezer |
Singer | Dhass Benjamin, Maria Ramesh |
lyricist | Maria Ramesh |
Ennai Kandavare Song Lyrics in Tamil
என்னைக் கண்டவரே
என் நிலையை அறிந்தவரே
என்னைக் கண்டவரே
என் நிலையை அறிந்தவரே
பெலவீனன் எந்தன் நிலையை
அறிந்து உதவிட வருபவரே
படுகுழியில் நான் கிடந்தாலும்
என்னைத் தூக்கிட வருபவரே
பரலோகம் என்னைக்கொண்டு சேர்ப்பவரே
பரலோகம் என்னைக்கொண்டு சேர்ப்பவரே
ஆதியிலே வார்த்தையினால்
உலகைப் படைத்தவரே
அழிந்திடும் என் வாழ்க்கையையும்
சிருஷ்டிக்க நினைப்பவரே
ஆதியிலே வார்த்தையினால்
உலகைப் படைத்தவரே
அழிந்திடும் என் வாழ்க்கையையும்
சிருஷ்டிக்க நினைப்பவரே
ஆறுதல் தேறுதலும் அள்ளித்தருபவரே
ஆறாத காயங்களை ஆற்றிதருபவரே
ஆறுதல் தேறுதலும் அள்ளித்தருபவரே
ஆறாத காயங்களை ஆற்றிதருபவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
என்னைக் கண்டவரே
என் நிலையை அறிந்தவரே
என்னைக் கண்டவரே
என் நிலையை அறிந்தவரே
நம்பிக்கை இல்லையென்றால்
நம்பிக்கை தருபவரே
விசுவாசம் இல்லையைன்றால்
துவக்கி முடிப்பவரே
நம்பிக்கை இல்லையென்றால்
நம்பிக்கை தருபவரே
விசுவாசம் இல்லையைன்றால்
துவக்கி முடிப்பவரே
வேதனை சோதனையில் கூடவே வருபரே
இருளின் தனிமையிலும் ஒளியாய் வருபவரே
வேதனை சோதனையில் கூடவே வருபரே
இருளின் தனிமையிலும் ஒளியாய் வருபவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
என்னைக் கண்டவரே
என் நிலையை அறிந்தவரே
என்னைக் கண்டவரே
என் நிலையை அறிந்தவரே
கேடான உலகினிலே
அன்பை விதைப்பவரே
தவறினவன் விலகினவன் என்று
ஒதுக்கிட மறுப்பவரே
கேடான உலகினிலே
அன்பை விதைப்பவரே
தவறினவன் விலகினவன் என்று
ஒதுக்கிட மறுப்பவரே
தொலைந்திட்ட காசானாலும்
தேடி எடுப்பவரே
தொலைந்திட்ட ஆடானாலும்
தோளில் சுமப்பவரே
தொலைந்திட்ட காசானாலும்
தேடி எடுப்பவரே
தொலைந்திட்ட ஆடானாலும்
தோளில் சுமப்பவரே
கெட்டகுமாரனையும் மீட்டவரே
வஸ்திரமும் மோதிரமும் தருபவரே
என்னைக் கண்டவரே
என் நிலையை அறிந்தவரே
என்னைக் கண்டவரே
என் நிலையை அறிந்தவரே
பெலவீனன் எந்தன் நிலையை
அறிந்து உதவிட வருபவரே
படுகுழியில் நான் கிடந்தாலும்
என்னைத் தூக்கிட வருபவரே
பரலோகம் என்னைக்கொண்டு சேர்ப்பவரே
பரலோகம் என்னைக்கொண்டு சேர்ப்பவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே
கெட்டகுமாரனையும் மீட்பவரே
வஸ்திரமும் மோதிரமும் தருபவரே