Hero Naan Song Lyrics
| Song | Hero Naan (ஹீரோ நான்) |
| Movie Name | Kaiyum Kalavum / கையும் களவும் |
| Actors | Sanchana Natrajan, Rohit, Madonna Sebastian, Ramya Nambessan, Senthil |
| Music | Satish Raghunathan |
| Singer | Milidhane Dinesh |
| lyricist | Roju |
| Movie Release date | 2022 |
Hero Naan Song Lyrics in Tamil
இதுவரை வில்லனாய்
வாழ்ந்த ஹீரோ நான்
உன் விரல் என் கரம்
வருட ஹீரோ நான்
கண்மணி அன்போடு பாய்கிறாய்
தேகத்தில் தோட்டாக்களாய்
பாய்ந்த பின் காதலா? காமமா?
ஏக்கத்தில் உனை கேட்கிறேன்
காதல் தான் காமத்தின்
விசையென கூறினாய்
இதுவரை வில்லனாய்
வாழ்ந்த ஹீரோ நான்
உன் விரல் என் கரம்
வருட ஹீரோ நான்
உன் நான் காதல் செய்ய
விதிமுறைகள் தோற்கும் அன்பே
எந்தன் கையில் உந்தன் தேகம்
கொள்ளை கொள்ளை மோகம்
வில்லை ஏந்தி ஏவும் பாணம்
போர்களத்தில் வீரம் சொல்லும்
காமதேவன் ஏந்தும் பாணம்
நம் களத்தில் வெல்லும்
சுகமும் இதழாய்
ஒளிரும் மனமே
வாழ்வின் பொருளாய்
திகழும் அழகே
பாடும் ஓர் நிலவு நான்
உன்னைத் தேடித் தேடித் தேய்ந்தேன்
இதுவரை வில்லனாய்
வாழ்ந்த ஹீரோ நான்
உன் விரல் என் கரம்
வருட ஹீரோ நான்
நுட்பமாக காதல் சொல்லு
காவியங்கள் தோன்றும் கண்ணே
காவியமே மலைந்து நிற்க
நாம் இணைந்தோமே
வார்த்தை முட்டும் பெண்ணை கண்டு
ஓவியங்கள் போற்றும் என்பேன்
ஓவியனே வியந்து நிற்க நீ பிறந்தாயே
கள்வன் நானே களவாய் நீயே
அன்பால் என்னை கொய்தாய் நீயே
போரினும் அன்பினும்
என்றும் வெல்லாய் நன்றே பெண்ணே
இதுவரை வில்லனாய்
வாழ்ந்த ஹீரோ நான்
உன் விரல் என் கரம்
வருட ஹீரோ நான்
கண்மணி அன்போடு பாய்கிறாய்
தேகத்தில் தோட்டாக்களாய்
பாய்ந்த பின் காதலா? காமமா?
ஏக்கத்தில் உனை கேட்கிறேன்
காதல் தான் காமத்தின்
விசையென கூறினாய்
இதுவரை வில்லனாய்
வாழ்ந்த ஹீரோ நான்
உன் விரல் என் கரம்
ம்ம் கூகூ ம்ம்…
Hero Naan Song Lyrics in English