Irandu manam vendum Song Lyrics
“கவிப்பேரரசு கண்ணதாசன்” பாடல் வரிகளில் “கே.வி. மகாதேவன்” இசையமைப்பில் “டி.எம். செளந்திராஜன்” பாடிய இப்பாடல் இடம் பெற்றுள்ள படம் “வசந்தமாளிகை”. இப்படத்தில் “சிவாஜி கணேசன், வாணஸ்ரீ” நடித்துள்ளனர்.
காதலன் தன் காதலியை மறக்கவும், அவளை மறக்க மதுவினை குடிக்கவும் இரண்டு மனம் கேட்பதாக கண்ணதாசன் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
சிறிய காயத்தினால் பெரிய துன்பத்தை கொடுப்பதாகவும், அந்த காயம் ஆறும் முன்னே அடுத்த காயம் ஏற்படுவதாகவும் மேலும் அந்தக் காயம் உடலில் என்றால் மருந்து போதும் என்றும் உள்ளத்தில் ஏற்பட்டதால் உள்ளம் என்ன செய்யும் என காதலன் தன் காதலி பிரிந்த வலியை பாட்டில் எடுத்துரைத்துள்ளார் கவிப்பேரரசு.
Song | Irandu manam vendum (இரண்டு மனம் வேண்டும்) |
Movie Name | Vasantha Maligai / வசந்த மாளிகை |
Actors | Sivaji Ganesan, Vanisri, V. S. Raghavan |
Music | K. V. Mahadevan |
Singer | T.M. Soundararajan |
lyricist | Kannadasan |
Movie Release date | 1972 |
Irandu manam vendum Song Lyrics in Tamil
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம்
அவளை மறப்பதற்கு
ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனது
நான் என்ன செய்வேன்
என்ன செய்வேன்
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
இரண்டு மனம் வேண்டும்
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போதும்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும்
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
இரண்டு மனம் வேண்டும்
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்று போதாதே
இரண்டு மனம் வேண்டும்..
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
இரண்டு மனம் வேண்டும்
Irandu manam vendum Song Lyrics in English
Kudippatharkku oru manam irunthaal
Avalai marandhu vidalaam
Avalai marappatharkku
Oru manam irunthaal
Kudithu vidalaam
Aanal iruppatho oru manathu
Naan enna seivenenna seiven
Enna seivenenna seiven
Irandu manam vendum
Iraivanidam ketpen
Ninaithu vaada ondru
Marandhu vaazha ondru
Irandu manam vendum
Iraivanidam ketpen
Ninaithu vaada ondru
Marandhu vaazha ondru
Irandu manam vendum
Siriya kaayam periya thunbam
Aarum munbae adutha kaayam
Siriya kaayam periya thunbam
Aarum munbae adutha kaayam
Udalil endraal marunthu pothum
Udalil endraal marunthu pothum
Ullam paavam enna seiyum
Irandu manam vendum
Iraivanidam ketpen
Irandu manam vendum
Iravum pagalum irandanaal
Inbam thunbam irandanaal
Iravum pagalum irandanaal
Inbam thunbam irandanaal
Uravum pirivum irandanaal
Ullam ondru pothathae
Irandu manam vendum
Uravum pirivum irandanaal
Ullam ondru pothathae
Irandu manam vendum
Kangalin thandanai kaatchi vazhi
Kaatchiyin thandanai kaadhal vazhi
Kangalin thandanai kaatchi vazhi
Kaatchiyin thandanai kaadhal vazhi
Kaadhalin thandanai kadavul vazhi
Kaadhalin thandanai kadavul vazhi
Kadavulai thandikka enna vazhi
Irandu manam vendum
Iraivanidam ketpen
Ninaithu vaada ondru
Marandhu vaazha ondru
Irandu manam vendum