Kaatril Un Vaasamea Song Lyrics in Tamil (காற்றில் உன் வாசமே) | Album Song

Kaatril Un Vaasamea Song Lyrics

Movie NameAlbum Song
Song NameKaatril Un Vaasamea (காற்றில் உன் வாசமே)
Actors—-
MusicR.G. Allen
SingerPriyanka N.K
lyricistB. Vetri Selvan
Movie Release date2022
Lyrics in தமிழ்

Kaatril Un Vaasamea Song Lyrics in Tamil

காற்றில் உன் வாசமே!

இது காதலின் சுவாசமே!

நேற்று இதுபோல் இல்லை

என் நெஞ்சு புதுவானிலை

 

நினைவும் நீயே!

என் நிழலும் நீயே!

மனதில் மெதுவாய் பரவும் தீயே

 

நினைவில் துளியாய்

நனைந்து உயிரை

எடுத்து வருவேன்

உனக்கு தரவேன்

 

இரவெல்லாம்

எதிராய் மாறுதே! முதல் முறை

தனிமையில்

இதயம் தீவானதே…!

 

வானவில் போலவே மாறுதே மனது

மார்கழி பூவென ஆனதே வயது

சில கோடை வாடை கடந்தேன்

உன் காதலாலே உறைந்தேன்

 

விழிகள் எனை நிறைந்தவனே!

வழித் துணையாய் வருவேன்

துளித்துளியாய் உனது உயிரில்

எனது உயிரால் கரைவேன்

 

காற்றில் உன் வாசமே!

இது காதலின் சுவாசமே!

நேற்று இதுபோல் இல்லை

என் நெஞ்சு புதுவானிலை

 

நினைவில் துளியாய்

நனைந்து உயிரை

எடுத்து வருவேன்

உனக்கு தரவே

 

இரவெல்லாம்

எதிராய் மாறுதே முதல் முறை

தனிமையில்

இதயம் தீவானதே…!

 

YouTube – Links

Leave a Comment