Kadal Thedi Song Lyrics
Movie Name | Christian Devotional Song |
Song Name | Kadal Thedi |
Actors | —– |
Music | Robert |
Singers | Nochipatti Thirumoorthi, Jothika |
lyricist | Fr. AVE. Britto |
Movie Release date | 2022 |
Kadal Thedi Song Lyrics in Tamil
கடல் தேடி ஓடும் நதி
கரை மாறி செல்வதில்லை
ஒளி தேடி சாயும் மலர்
மலராமல் போவதில்லை
பொருள் தேடி அலையும் நீ
என்னவாக போகின்றாய்
பொருள் தேடி அலையும் நீ
என்னவாக போகின்றாய்
இறைனானோ தேடி வர
எங்கோ நீ செல்கின்றாய்
பாதைகள் மாறினால்
பயணங்கள் பாழாகும்
சிலுவையை கண்டுகொண்டால்
சுமைகள் சுகமாகும்
கடல் தேடி ஓடும் நதி
கரை மாறி செல்வதில்லை
ஒளி தேடி சாயும் மலர்
மலராமல் போவதில்லை
நட்பில்லா ஓர் நண்பன்
நயவஞ்சம் செய்துவிட
குற்றமில்லா பிதாமகன்
குறை ஏற்று நிற்கின்றார்
நட்பில்லா ஓர் நண்பன்
நயவஞ்சம் செய்துவிட
குற்றமில்லா பிதாமகன்
குறை ஏற்று நிற்கின்றார்
தந்தையவர் சிதத்தை
தார்மீகமாய் ஏற்று
சிலுவையை சுமந்தப்படி
சிந்திக்க சொன்னாரே
இதயமதை கல்லாக்கி
இரக்கத்தை மூடி வைத்து
பகைமனமாய் வாழ்வோரை
பாவியான சொல்லுகிறார்
பாவியான சொல்லுகிறார்
பாதைகள் மாறினால்
பயணங்கள் பாழாகும்
சிலுவையை கண்டுகொண்டால்
சுமைகள் சுகமாகும்
பாதைகள் மாறினால்
பயணங்கள் பாழாகும்
சிலுவையை கண்டுகொண்டால்
சுமைகள் சுகமாகும்
படைவீரர் சூழ்ந்துவிட
சீடர்கள் ஓடிவிட
ஆதரிக்க யாருமின்றி
அனாதையாய் நிற்கின்றார்
படைவீரர் சூழ்ந்துவிட
சீடர்கள் ஓடிவிட
ஆதரிக்க யாருமின்றி
அனாதையாய் நிற்கின்றார்
இரக்கமின்றி இகழ்ந்தோரை
வெறுத்துத் தள்ளிடாமல்
அறியாமல் செய்கிறார்கள்
மன்னியுங்கள் என்றாரே
உண்மையதை உள்வைத்து
உள்ளமதில் உயிர் வைத்து
வலிசுமந்து வருவோர்க்கு
வழிகாட்டி அவர்தானே
வழிகாட்டி அவர்தானே
பாதைகள் மாறினால்
பயணங்கள் பாழாகும்
சிலுவையை கண்டுகொண்டால்
சுமைகள் சுகமாகும்
பாதைகள் மாறினால்
பயணங்கள் பாழாகும்
சிலுவையை கண்டுகொண்டால்
சுமைகள் சுகமாகும்
கடல் தேடி ஓடும் நதி
கரை மாறி செல்வதில்லை
ஒளி தேடி சாயும் மலர்
மலராமல் போவதில்லை
பொருள் தேடி அலையும் நீ
என்னவாக போகின்றாய்
பொருள் தேடி அலையும் நீ
என்னவாக போகின்றாய்
இறைனானோ தேடி வர
எங்கோ நீ செல்கின்றாய்
பாதைகள் மாறினால்
பயணங்கள் பாழாகும்
ஆஆஆ…
சிலுவையை கண்டுகொண்டால்
சுமைகள் சுகமாகும்
பாதைகள் மாறினால்
பயணங்கள் பாழாகும்
சிலுவையை கண்டுகொண்டால்
சுமைகள் சுகமாகும்