Kanginra Yaavum Song Lyrics
| Movie Name | Devotional Song |
| Song Name | Kanginra Yaavum |
| Music | Henry |
| Singer | Aruna |
| lyricist | Ilankavi arun |
Kanginra Yaavum Song Lyrics in Tamil
காண்கின்ற யாவும் நீதானம்மா
என் பாவம் தீர அருள்வாயம்மா
நான் செய்த பிழையோ இப்பிறப்பானது
வான் பார்த்து என் ஜீவன் உனை தேடுது
ஜகம் யாவும் அருள்வாயே எனை பாரம்மா
அகம் காக்க உனையன்றி துணை யாரம்மா
காண்கின்ற யாவும் நீதானம்மா
என் பாவம் தீர அருள்வாயம்மா
அபிசேகம் அலங்காரம் உனை சேரட்டும்
தினம் அதை காணும் வரம் ஒன்று என கூடட்டும்
கரம் நூறு இருந்தாலும் பயனில்லையே
உன் கரம் கொண்டு காப்பாயா என் அன்னையே
தீயெல்லாம் பூவாகும் அம்மா உன் அருளாலே
வேம்பெல்லாம் மருந்தாகும் தாயே நீ தந்தாலே
எல்லோரும் பிறப்பாலே உன் பிள்ளையே
காண்கின்ற யாவும் நீதானம்மா
என் பாவம் தீர அருள்வாயம்மா
எங்கெங்கும் நிறைந்தாயே நீ உண்மையே
அங்கெங்கும் அறிந்தேன நான் உன்னையே
கண் ஆயிரம் கொண்டாய் கருமாரியே
ஒரு கண் கொண்டு காப்பாயா உருமாறியே
அம்மா உன் அருள் வேண்டி கை கூப்பி தொழுதேனே
எங்கும் நிறைந்தவளே உனை நாடி வந்தேன
உலகாளும் நாயகியே நீதானம்மா
காண்கின்ற யாவும் நீதானம்மா
என் பாவம் தீர அருள்வாயம்மா
நான் செய்த பிழையோ இப்பிறப்பானது
வான் பார்த்து என் ஜீவன் உனை தேடுது
ஜகம் யாவும் அருள்வாயே எனை பாரம்மா
அகம் காக்க உனையன்றி துணை யாரம்மா
காண்கின்ற யாவும் நீதானம்மா
என் பாவம் தீர அருள்வாயம்மா