Kezhavi Kattum Song Lyrics in Tamil | Kuiko

Kezhavi Kattum Song Lyrics

Movie Name Kuiko
Song Name Kezhavi Kattum
Actor Vidarth, Yogi Babu
Music Anthony Daasan
Singer Anthony Daasan
lyricist T.Arul Chezhian
Movie Release date 2023

Kezhavi Kattum Song Lyrics in Tamil

 

 

உலகம் போற்றும் தியாக தாய்க்கு

ஊரு சனத்தின் வீர வணக்கம்

ஊரு சனத்தின் வீர வணக்கம்

 

வீர வணக்கம் வீர வணக்கம்

 

வீர வணக்கம் வீர வணக்கம்

 

விதச்சி விட்டா முளச்சிடுவான்னு

எரிச்சிடவே திட்டம் போட்போம்

எரிச்சகிழவியா எழுந்துவான்னு

பினிக்ஸ்ஸா பிச்சரு வச்சோம்

 

பினிக்ஸ்ஸா பிச்சரு வச்சோம்

 

கிழவி காட்டு பவுச பாடு

 

நாலு ஊரு கூடுது பார்டா ஆ….

நாலு ஊரு கூடுது பார்டா

நாட்டுக்கலைகள் நடக்குது ஜோரா

ஆயக்கலைகள் அறுபத்திநாலில்

அடைபடாத அயிட்டம் ஒன்னு

 

சபை நடுவே லைன்மேன் நின்று

சாக்கடிக்க சாகசம் செய்தார்

 

சாக்கடிக்க சாகசம் செய்தார்

 

கிழவி காட்டு பவுச பாடு

வீர வணக்கம் போட்டோம் பாரு

 

வீர வணக்கம் வீர வணக்கம்

 

வீர வணக்கம் வீர வணக்கம்

 

கடமை செய்ய காக்கி போலிஸ்

யூனிபாமில் மிடுக்காய் வந்தார்

பாதுகாக்க வந்த கனகா

வந்த இடத்தில் காதலில் விழுந்தா

 

வந்த இடத்தில் காதலில் விழுந்தா

 

காவல் போலீஸ் காதல் செய்ய

பாரா போலீஸ் மாங்காய் எறிந்தார்

 

வீர தீர சர்ட்டில் ஐயா

கரகாட்டத்தில் மனச தொலச்சார்

 

கரகாட்டத்தில் மனச தொலச்சார்

 

கிழவி காட்டு பவுச பாடு

வீர வணக்கம் போட்டோம் பாரு

 

போர் அடிச்ச மலையரசிக்கி

புரணி கதைகள் புஷ்பா சொல்ல

நால்வர் தூக்க அட்டாக் பாண்டி

அரச நிலையில் அசந்து படுத்தார்

 

அரச நிலையில் அசந்து படுத்தார்

 

உலக தலைவர் திரண்டு வந்து

வீரம்மாவுக்கு பெருமை செய்ய

எதித்த அலுமு பாட்டி

வீரம்மாவின் அருமை சொன்னார்

 

வீரம்மாவின் அருமை சொன்னார்

 

கிழவி காட்டு பவுச பாடு

வீர வணக்கம் போட்டோம் பாரு

 

கால்குலேட்டர் சண்முகம் அண்ணன்

மண்ட தேய கணக்கு போட

கட் அடிச்ச ஸ்கூலு பசங்க

நியூசு சேனல டிக்டாக் செய்தார்

 

நியூசு சேனல டிக்டாக் செய்தார்

 

டிஸ்டப் ஆன சண்முகம் அண்ணன்

ரிப்போட்டர விரட்டி அடிச்சார்

 

சந்துக்குள்ள வந்த சொந்தம்

சரக்கடிச்சி சாஞ்சிருக்க

 

மூனு ரூவா மிச்சருக்காக

சகல ரெண்டும் ரகள செய்தார்

 

சகல ரெண்டும் ரகள செய்தார்

 

கிழவி காட்டு பவுச பாடு

வீர வணக்கம் போட்டோம் பாரு

 

உலகம் போற்றும் தியாக தாய்க்கு

ஊரு சனத்தின் வீர வணக்கம்

ஊரு சனத்தின் வீர வணக்கம்

 

வீர வணக்கம் வீர வணக்கம்

 

வீர வணக்கம் வீர வணக்கம்

YouTube-Links

Leave a Comment