Malai Poluthin Song Lyrics in Tamil (மாலைப் பொழுதின்) | Bhagyalakshmi / பாக்கியலெட்சுமி

Malai Poluthin Song Lyrics

“மாலைப் பொழுதின்” இப்பாடல் 1961 வெளிவந்த திரைப்படமான “பாக்கியலெட்சுமி”. படத்தில் இடம் பெற்றுள்ளது “கவிஞர் கண்ணதாசன்” பாடல் வரிகளை எழுத “எம்.எஸ். விஸ்வநாதன்” இசையமைக்க “பி. சுசிலா” ஆகியோர் பாடியுள்ளனர்.

SongMalai Poluthin (மாலைப் பொழுதின்)
Movie NameBhagyalakshmi / பாக்கியலெட்சுமி
ActorsGemini Ganesan, Sowcar Janaki
MusicM.S. Viswanathan
SingerP. Susheela
lyricistKannadasan
Movie Release date1961

Lyrics in தமிழ்Lyrics in English

 Malai Poluthin Song Lyrics in Tamil

மாலை பொழுதின் மயக்கத்திலே

நான் கனவு கண்டேன் தோழி

மாலை பொழுதின் மயக்கத்திலே

நான் கனவு கண்டேன் தோழி

 

மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை

காரணம் ஏன் தோழி

காரணம் ஏன் தோழி ஆ ஆ ஆ…

 

மாலை பொழுதின் மயக்கத்திலே

நான் கனவு கண்டேன் தோழி

 

இன்பம் சிலநாள்

துன்பம் சிலநாள் என்றவர்

யார் தோழி

 

இன்பம் கனவில்

துன்பம் எதிரில்

காண்பது ஏன் தோழி

காண்பது ஏன் தோழி ஆ ஆ ஆ…

 

மாலை பொழுதின் மயக்கத்திலே

நான் கனவு கண்டேன் தோழி

 

மணமுடித்தவர் போல் அருகினிலே

ஓர் வடிவு கண்டேன் தோழி

மங்கை என் கையில் குங்குமம் தந்தார்

மாலை இட்டார் தோழி

 

வழி மறந்தேனோ

வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி

அவர் மறவேன் மறவேன் என்றார்

உடனே மறந்து விட்டார் தோழி

பறந்து விட்டார் தோழி ஆ ஆ ஆ…

 

மாலை பொழுதின் மயக்கத்திலே

நான் கனவு கண்டேன் தோழி

 

கனவில் வந்தவர் யாரென கேட்டேன்

கணவர் என்றார் தோழி

கணவர் என்றால் அவர்

கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி

 

இளமை எல்லாம் வெறும் கனவு மயம்

இதில் மறைந்தது சில காலம்

தெளிவும் அறியாது முடிவும் தெரியாது

மயங்குது எதிர்காலம்

மயங்குது எதிர்காலம் ஆ ஆ ஆ…

 

மாலை பொழுதின் மயக்கத்திலே

நான் கனவு கண்டேன் தோழி

 

மனதில் இருந்தும்

வார்த்தைகள் இல்லை

காரணம் ஏன் தோழி

காரணம் ஏன் தோழி

ஆ ஆ ஆ…

 

மாலை பொழுதின் மயக்கத்திலே

நான் கனவு கண்டேன் தோழி

 Malai Poluthin Song Lyrics in English

Maalai Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi

Maalai Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi

 

Manadhil Irundhum vaarthaigal Illai

kaaranam yen thozhi

Kaaranam yen thozhi aa aa aa…

 

Maalai Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi

 

Inbam silanaal

Thunbam silanaal endravar

Yaar thozhi

 

Inbam kanavil

Thunbam ethiril

Kaanbathu Yen thozhi

Kaanbathu yen Thozhi aa aa aa…

 

Maalai Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi

 

Manamudithavar Pol aruginilae

Oar vadivu Kanden thozhi

Mangai en Kaiyil kungumam thandhaar

Maalai ittaar thozhi

 

Vazhi Marantheno

Vandhavar Nenjil saainthuvitten thozhi

Avar Maraven maraven Endrar

Udanae marandhu Vittar thozhi

Paranthu Vittar thozhi aa aa aa…

 

Maalai Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi

 

Kanavil Vanthavar yarena keten

Kanavar endrar thozhi

Kanavar Endral avar

Kanavu Mudinthadhum pirinthadhu

Yen thozhi

 

Ilamai ellam Verum kanavu mayam

Idhil marainthadhu sila kaalam

Thelivum Ariyathu mudivum

Theriyathu mayankuthu ethirkaalam

Mayankuthu ethirkaalam aa aa aa…

 

Maalai Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi

 

Manadhil Irundhum

Vaarthaigal Illai

Kaaranam yen thozhi

Kaaranam yen thozhi aa aa aa…

 

Maalai Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi

 

YouTube – Links

Leave a Comment