Mandhaigal Song Lyrics
| Movie Name | Aramudaitha Kombu / அறமுடைத்த கொம்பு |
| Song Name | Mandhaigal |
| Actors | Anand, Jesi |
| Music | Al Rufian |
| Singers | Al Rufian |
| lyricist | Vinoth Singh |
| Movie Release date | 2023 |
Mandhaigal Song Lyrics in Tamil
மந்தைகள் அறிவதில்லை
தன் கால்களால் நசுக்கப்படும்
புழக்களின் வலியை
விந்தைகள் விடுவதில்லை
தன் விதிகளின் விளையாட்டால்
விடுபட்ட வாழ்வை
கருவறையில் உருவாகி
கல்லறையில் உருவிழந்தோம்
இடையில் ஏனடா?
வேற்றுமை உணர்வடா
அறத்தினை உடைத்த கொம்புமுனை
தன் உயிரையும் உணர்வையும்
எடுத்துதான் சென்றதே
உயிர்விடும் நேரத்தில்
இந்த உணர்வுகள் ஊமையான
கதைதான் இதுவே
சேய் இவன் தேடி தாய் இவள்
கலைந்து போன காட்சிகள்
தாய் மடி சிந்திய பால் துளி
நிறங்கள் மாறம் சாட்சிகள்
விடிந்தும் விடியாத பொழுதுதிதுவே
விடியாத வாழ்க்கை
இந்த புழுக்களுக்கே
வேறென்ன கேட்டோம்
சின்ன வாழ்வு ஒன்று தானே
புழுக்களாய் பிறந்த பிறவி
இவர்கள் தவறுமில்லை
தருமமில்லை ஏதுமில்லை இறைவா
நசுக்கிடும் கால்கள் எல்லாம்
புழுக்கள் வலிகளை
உணரத்தான் மறுக்குதே இறைவா
கருவறையில் உருவாகி
கல்லறையில் உருவிழந்தோம்
இடையில் ஏனடா?
வேற்றுமை உணர்வடா
மந்தைகள் உணரட்டுமே
தன் கால்களால் நசுக்கப்படும்
புழக்களின் வலியை
மந்தைகள் உணரட்டுமே
தன் கால்களால் நசுக்கப்படும்
புழக்களின் வலியை