Nedumaram Song Lyrics
| Movie Name | J.Baby |
| Song Name | Nedumaram |
| Actors | Dinesh, Urvasi, Maran, Kavitha Bharathy |
| Music | Tony Britto |
| Singers | Pradeep Kumar, Annie J |
| lyricist | Uma Devi |
| Movie Release date | 2024 |
Nedumaram Song Lyrics in Tamil
நெடுமரம் தொலைந்ததே
நிழல் இங்கு மறைந்ததே
கூடோடு குயில் வீழந்ததே
பசியினை உணர்ந்தும்
மடியில் பால் சுரந்திடும்
தாய்மைக்கு ஈடேது இங்கே
ஊரும் தண்ணீர் கூட
ஒரு நேரம் காயும்
உன் பாசம் தீராதம்மா
காணும் முகம் யாவும்
உன் சாயல் போலே
கானல் காட்சி ஏனோ
நெடுமரம் தொலைந்ததே
நிழல் இங்கு மறைந்ததே
கூடோடு குயில் வீழந்ததே
பசியினை உணர்ந்தும்
மடியில் பால் சுரந்திடும்
தாய்மைக்கு ஈடேது இங்கே
பிள்ளை கூவத்தில்
கள்ளம் சேர்ந்ததா
கண்கள் தாண்டியே
கங்கை போனதா
உன் வாழ்த்து இல்லாமல் நான்
ஆகாயம் நான் போனாலுமே
என் தோகை வான் ஏறுமா
உன் கால்கள் இல்லாத ஓர்
பொன் வீட்டில் வாழ்ந்தாலுமே
என் வாழ்வு வாழ்வாகுமா
சுற்றும் பூமியே
நீ ஊட்டும் அன்பில் தானம்மா
எந்தன் வாழ்க்கையே
நீ போட்ட பிச்சை தானம்மா
நெஞ்சனைச்சி கெஞ்சிடனும்
எங்கிருக்க யென் அம்மா
விழி உனை இழந்ததும்
விளக்குகள் அணைந்ததே
இருள் வந்து எனை சூழ்ந்ததே
பிழைகளை பொறுத்திடும்
வலிகளை துடைத்திடும்
தாயே உன் நிழல் வேண்டுமே