Netrum Indrum Song Lyrics in Tamil | Marakkuma Nenjam

Thudikkum Nenjam Mazhai Song Lyrics

Movie NameMarakkuma Nenjam
Song NameNetrum Indrum
ActorsRakshan, Dheena, Malina
MusicSachin Warrier
SingersSachin Warrier
lyricistThamarai
Movie Release date2023

Netrum Indrum Song Lyrics in Tamil

நேற்றும் இன்றும் இருதினம்

ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்

அரும்பு மலர அரைக்கணம்

அது மலர்ந்தது எந்தன் புது முகம்

 

தே மாதுளை இதழ்களால்

தேன் வார்த்தை உதிக்கிறாள்

நான் பார்த்தை பார்த்துமே

பாராததாய் நடிக்கிறாள்

 

இந்த நாடக அரங்கில்

நாட்கள் நகருதே

இந்தக் காவியக் கதையில்

காய்ச்சல் கனலுதே

 

ஹேய் காற்றும் இவளே

ஹேய் தோள் சிறகும் இவளே

ஹேய் என் வானம் முகில்

மழை அனைத்துமே இவள்

 

நேற்றும் இன்றும் இருதினம்

ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்

அரும்பு மலர அரைக்கணம்

அது மலர்ந்தது எந்தன் புது முகம்

 

பேச வேண்டி வருவேனே ஓடி

உனை பார்த்ததும் மறந்து போகும் சேதி

 

ஒத்திகைகள் பல வீட்டில் செய்தும்

அவை போதவில்லை அது தானே மீதி

புரியாத பல கேள்வி வந்தும்

திரியாத வரம் வேண்டிக் கொள்வேன்

 

அறியாத வயதென்று சொல்வாய்

அதை நான் எழுதி தாண்டிச் செல்வேன்

இது சூரியகாந்தி பூவின் இதயமே

நீ போகிற திசையில் தானே திரும்புமே

 

ஹேய் காற்றும் இவளே

ஹேய் தோள் சிறகும் இவளே

ஹேய் என் வானம் முகில்

மழை அனைத்துமே இவள்

 

தூக்கம் வந்து இரு கண்ணை சுழட்டும்

உன் பிம்பம் வந்து இடை நின்று கெடுக்கும்

புத்தகங்கள் பல பாடல் உரைக்கும்

அது மீண்டும் மீண்டும் இவள் பெயரே உதிக்கும்

 

பலர் சூழ வரும் கூட்டம் என்றால்

உனை மட்டும் தனியாக பார்ப்பேன்

பலர் கூச்சல் இடுகின்ற போது

குரலாக உனை மட்டும் கேட்பேன்

 

தினம் பேசிட வேண்டும்

பெண்ணே அனுமதி

உனை பார்த்திடும் நொடிகள்

எல்லாம் வெகுமதி

 

ஹேய் காற்றும் இவளே

ஹேய் தோள் சிறகும் இவளே

ஹேய் என் வானம் முகில்

மழை அனைத்துமே இவள்

 

நேற்றும் இன்றும் இருதினம்

ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்

 

YouTube – Links

Leave a Comment