Nilaimaiyai Parkka Vantavare Song Lyrics
Movie Name | Christian Devotional Song |
Song Name | Nilaimaiyai Parkka Vantavare |
Music | Antrevin Starry |
Singer | S.Akash |
lyricist | S.Akash |
Nilaimaiyai Parkka Vantavare Song Lyrics in Tamil
தேசாதி தேசமெல்லாம்
தேரோடும் வீதியெல்லாம்
கூட்டம் கூட்டமாக
மக்களெல்லாம் வந்து போக
மகராசன் வந்தார் நமக்காக
மக்களெல்லாம் வந்துபோக
இயேசுசாமி வந்தார் நமக்காக
எங்கள் நிலைமையை பார்க்க
எங்கள் குறைகளை தீர்க்க
வந்தவரே வந்தவரே
நிலைமைப் பார்க்க
என் குறை தீர்க்க
இறங்கி வந்தவரே
வளமையாக என் நிலைமாற
உன் அருள் தந்தவரே
சுமைகளை பெருவரமாக
சுமந்தவர் நீயே
மரிய மாமரி மாதாவே
தரித்து தந்தவரே
மகத்தான மகராசன்
மண்ணுலகம் வந்திட்டாரு…
ஜிங்கிடு சிக்கான்
ஏ… ஜிங்கிடு சிக்கான்
ஜிங்கிடு சிக்கான்
ஏ… ஜிங்கிடு சிக்கான்
நிலைமைப் பார்க்க
என் குறை தீர்க்க
இறங்கி வந்தவரே
வளமையாக என் நிலைமாற
உன் அருள் தந்தவரே
கண்ணிமையாய் காத்திடவே
தேடி வந்தாரு
கவலைகளை கரச்சிடவே
ஓடி வந்தாரு
கஷ்டப்படும் சின்ன மக்களை
பாக்க வந்தாரு
உங்களுக்கு நான் இருக்கேன்
என்று வந்தாரு
ஏழை மக்களுக்கு
காவலாகதான் இருக்க
எங்களின் இயேசுசாமி
இவ்வுலகில் வந்தாரய்யா
பாவம் செய்யாமல்
பாசத்தோடு நாம் இருக்க
பாதுகாத்திடவே
பரிசுத்தர் வந்தாரய்யா
எட்டு பட்டித்தொட்டி கலகலக்க
எட்டெடுத்து வைக்க மனம்மகிழ
மாட்டுக்கொட்டகையில்
மாட்டுக்கொட்டகையில்
மலராக மலர்ந்தவரு
வேட்டு சத்தமெல்லாம்
பாட்டாக பாடுதிங்கு
மாட்டுக்கொட்டகையில்
மலராக மலர்ந்தவரு
வேட்டு சத்தமெல்லாம்
பாட்டாக பாடுதிங்கு
வாழும் காலம் எல்லாம்
வாழ்த்திப் பாடுதைய்யா
வானம் பூமிக்குமே
விருந்து நடக்குதைய்யா
வந்தனம் வந்தருளும் இயேசுவே
வந்தெம்மை காத்தருளும் இராசனே
வந்தனம் வந்தருளும் இயேசுவே
சங்கீதம் கானம் சொல்லி பாடுவேன்
நிலைமைப் பார்க்க
என் குறை தீர்க்க
இறங்கி வந்தவரே
வளமையாக என் நிலைமாற
உன் அருள் தந்தவரே
சுமைகளை பெருவரமாக
சுமந்தவர் நீயே
மரிய மாமரி மாதாவே
தரித்து தந்தவரே
மகத்தான மகராசன்
மண்ணுலகம் வந்திட்டாரு…
ஜிங்கிடு சிக்கான்
ஏ… ஜிங்கிடு சிக்கான்
ஜிங்கிடு சிக்கான்
ஏ… ஜிங்கிடு சிக்கான்