Nilavum Uruguthe Song Lyrics
| Movie Name | Devil |
| Song Name | Nilavum Uruguthe |
| Actors | Vidharth, Thrigun, Poorna, subhashree |
| Music | Mysskin |
| lyricist | Mysskin |
| Movie Release date | 2023 |
Nilavum Uruguthe Song Lyrics in Tamil
நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
தினவு என்னைத் தீண்ட
இமைகள் மூடுதே
நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
தினவு என்னைத் தீண்ட
இமைகள் மூடுதே
அலை மோதி கரையேற
இது தான் இணைவின் சுகமே
விரல் தேட உடல் வேக
இது தான் இறையின் மடியோ
நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
தினவு என்னைத் தீண்ட
இமைகள் மூடுதே
தேகம் வளைந்திட ஆடை நழுவிட
வெட்கத்தை தேடுகிறேன்
மோகம் வளர்ந்திட ஆசை அலைந்திட
முத்தத்தில் தோற்கிறேன்
என்ன ரோதனை சுக வேதனை
இந்த தீயை யார் வந்து அணைப்பார்
பட்டு மேனியில் மொட்டு விரிந்திட
இந்த பூவை யார் வந்து பறிப்பார்
நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
தினவு என்னைத் தீண்ட
இமைகள் மூடுதே
பச்சைமொழி என்னை கிச்சுக்கிச்சு மூட்ட
சத்தத்தில் சிரிக்கிறேன்
இச்சை வழி தேடி மிச்சம் மிச்சமின்றி
உச்சத்தை அடைகிறேன்
இந்த காமம் என்ன ஆழ்கடலோ
யார் வந்து முத்துக் குளிப்பார்
இந்த காதல் என்ன பெரும் வனமோ
யார் நடந்து கடப்பார்
நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
தினவு என்னைத் தீண்ட
இமைகள் மூடுதே
அலை மோதி கரையேற
இது தான் இணைவின் சுகமே
விரல் தேட உடல் வேக
இது தான் இறையின் மடியோ
நிலவு உருகுதே
குளிரும் எரியுதே
தினவு என்னைத் தீண்ட
இமைகள் மூடுதே
தநநநா தநநநா தநந நாநநா