Paavi Nee Song Lyrics
| Song Name | Paavi Nee |
| Music | Edward Thompson |
| Singers | Christina Beryl Edward |
| lyricist | Jacintha Jayaseelan |
Paavi Nee Song Lyrics in Tamil
பாவி நீ ஓடிவா
மீட்பர் அழைக்கிறார்
பாவி நீ ஓடிவா
மீட்பர் அழைக்கிறார்
கோரமா பாடுகள் உனக்காகவே
வந்திடுவாய் என் மகனே
பாவ ரோகங்கள் நீக்கிடவே
வந்திடுவாய் என் மகனே
பாவி நீ ஓடிவா
மீட்பர் அழைக்கிறார்
பாவி நீ….
வான் புவி படைத்திட்ட வல்ல பரன்
வாறாலே அடிபடும் வேதனை பார்
விண்ணாளும் தேவனின் ஏக சுதன்
முள்முடி ஏற்றிடும் அன்பினை பார்
இணையற்ற ஏசுவின் அன்பு – உன்னை
பழுதற்ற தூயனாய் மாற்றிடுமே
சத்திய தேவனின் மீட்பு – உன்னை
நித்திய வாழ்வினில் சேர்த்திடுமே
பரம் பதமே உன்னை நித்தமே வாழ்த்திடுமே
பாவி நீ ஓடிவா
மீட்பர் அழைக்கிறார்
பாவி நீ….
சிந்தையின் பாவங்கள் நீக்கிடவே
நிந்தையின் ரூபமாய் மாறினாரே – தன்
மந்தையில் உன்னையும் சேர்த்திடவே
தன்னையே தந்திட்ட அன்பிதுவே
உனக்கெதிரான கையெழுத்தை
மூன்றாணி கொன்டே மாற்றினாரே
பாவத்தில் மரித்திட்ட உன்னை – ஏசு
பாசமாய் உயிரிப்பிக்க மாண்டாரே
சிலுவை நிழல் உனக்கு தரும் பேரானந்தம்
சிலுவை நிழல் உனக்கு தரும் பேரானந்தம்
பாவி நீ ஓடிவா
மீட்பர் அழைக்கிறார்
பாவி நீ ஓடிவா
மீட்பர் அழைக்கிறார்
கோரமா பாடுகள் உனக்காகவே
வந்திடுவாய் என் மகனே
பாவ ரோகங்கள் நீக்கிடவே
வந்திடுவாய் என் மகனே