Rajakumari Rajakumari Song Lyrics
Movive | Kuruvan Kootai Mariyaman / Amman Devotional songs |
Name | Lord Murugan Song |
Music | MR Kumar |
Singer | Parimalam Saritha, Ambiraj |
lyricist | Murugaraj Sadasivam |
Nee Allaal Deivamillai Song Lyrics in Tamil
ராஜகுமாரி ராஜகுமாரி
குருவன்கோட்டை ராஜகுமாரி
ராஜகுமாரி ராஜகுமாரி
குருவன்கோட்டை ராஜகுமாரி
மாரியம்மா மாரியம்மா
குருவன்கோட்டை ராணியம்மா
மாரியம்மா மாரியம்மா
குருவன்கோட்டை ராணியம்மா
ராஜகுமாரி ராஜகுமாரி
குருவன்கோட்டை ராஜகுமாரி
தென்னாட்டின் தேவியம்மா
நம்ம மாரிபோல தாய் யாரம்மா
ராஜகுமாரி ராஜகுமாரி
குருவன்கோட்டை ராஜகுமாரி
தென்னாட்டின் தேவியம்மா
நம்ம மாரிபோல தாய் யாரம்மா
ஊர் செழிக்க பேர் விளங்க
அற்புதங்கள் செஞ்சி வரும் மாரியம்மா
குருவன்கோட்டை மாரி கோவில்
மண் எல்லாம் நமக்கு தீருநீறு அம்மா
ஏராளம் தாராளம் பொன் பொருளத்தான்
தாராளம் நம் மாரி கோடி வரம் தான்
ராஜகுமாரி ராஜகுமாரி
குருவன்கோட்டை ராஜகுமாரி
தென்னாட்டின் தேவியம்மா
நம்ம மாரி போல தாய் யாரம்மா
ராஜகுமாரி ராஜகுமாரி
குருவன்கோட்டை ராஜகுமாரி
தென்னாட்டின் தேவியம்மா
நம்முடைய மாரி போல தாய் யாரம்மா
ஆடி ஓடி தடுமாறும் எங்கள
மாரி நீயம் உனக்குள்ள வைக்கிற
நாளும் பொழுதும் வருகின்ற மக்கள்
மாரியாயி நகராம தைக்கிற
ஆரணி தாண்டியே பேரணி வந்தவ
ஊருக்குள் தங்கியே உயிரானவ
மாரி மகமாயி மழை மாரி கொடுத்தா
ஏரி கம்மாயி நெறைஞ்சோடி இருக்கும்
தேவி என்தாயி உன் பார்வை இருந்தால்
நட்ட வெள்ளாமை நன்றாக செழிக்கும்
தாரணி ஆரணி அன்னபூரணி
வாழிய வாழிய வாழியவே
கூர்முனை வேலால் ஊழ்வினை அறுத்திடும்
கோமகளின் புகழ் வாழியவே
தாரணி ஆரணி அன்னபூரணி
வாழிய வாழிய வாழியவே
கூர்முனை வேலால் ஊழ்வினை அறுத்திடும்
கோமகளின் புகழ் வாழியவே
ராஜகுமாரி ராஜகுமாரி
குருவன்கோட்டை ராஜகுமாரி
தென்னாட்டின் தேவியம்மா
நம்ம மாரி போல தாய் யாரம்மா
ராஜகுமாரி ராஜகுமாரி
குருவன்கோட்டை ராஜகுமாரி
தென்னாட்டின் தேவியம்மா
நம்முடைய மாரி போல தாய் யாரம்மா
பாரம் தீர்க்கும் மகராசி உனக்கு
வார வாரம் பல பூஜை இருக்கு
நாளு தேதி கணக்கென்ன இருக்கு
வார வாரம் பல பூஜை இருக்கு
வைகாசி கடைசி செவ்வாய குறிச்சி
காப்பு கட்டி கொண்டாடுவோம்
ஆத்தாவே உனக்கு
ஆயி மகமாயி ரூபம் கொண்ட
பெண்கள் தரும் தீப விளக்குல
தீபாவளி தெரியும்
போட்ட முளைப்பாரி
மொளச்சத போல
ஆத்தா கரம் வந்து
நமை தாங்கி உயர்ந்தும்
ஆயிரங்கண்ணு பானைய பார்த்தா
ஆத்தா வாரத போல தெரியும்
சப்பரம் ஏறிய சங்கரியே
உன் பொற்பதம் பணிஞ்சா புகழ் கூடும்
ஆயிரங்கண்ணு பானைய பார்த்தா
ஆத்தா வாரத போல தெரியும்
சப்பரம் ஏறிய சங்கரியே
உன் பொற்பதம் பணிஞ்சா புகழ் கூடும்
ராஜகுமாரி ராஜகுமாரி
குருவன்கோட்டை ராஜகுமாரி
தென்னாட்டின் தேவியம்மா
நம்ம மாரி போல தாய் யாரம்மா
ராஜகுமாரி ராஜகுமாரி
குருவன்கோட்டை ராஜகுமாரி
தென்னாட்டின் தேவியம்மா
நம்ம மாரி போல தாய் யாரம்மா
ஊர் செழிக்க பேர் விளங்க
அற்புதங்கள் செஞ்சி வரும் மாரியம்மா
குருவன்கோட்டை மாரி கோவில்
மண் எல்லாம் நமக்கு தீருநீறு அம்மா
ஏராளம் தாராளம் பொன் பொருளத்தான்
தாராளம் நம் மாரி கோடி வரம் தான்
ராஜகுமாரி ராஜகுமாரி
குருவன்கோட்டை ராஜகுமாரி
தென்னாட்டின் தேவியம்மா
நம்ம மாரி போல தாய் யாரம்மா
ராஜகுமாரி ராஜகுமாரி
குருவன்கோட்டை ராஜகுமாரி
தென்னாட்டின் தேவியம்மா
நம்முடைய மாரி போல தாய் யாரம்மா
ஏழு பிறவிகள் இந்தப் புவியில்
நாங்கள் பிறந்து வந்தாலும்
இந்த குருவன்கோட்டை
புண்ணிய பூமியில் பிறக்க வேண்டுமம்மா
இரு கரங்களும்
ஒரே தாயை துதிக்க வேண்டும்
இரு கண்களும்
ஒரே தாயை காண வேண்டும்
இரு கால்களும்
ஒரே சன்னிதியில் நடந்திட வேண்டும்
ஓர் உடலும் ஓர் உள்ளமும்
குருவன்கோட்டை மாரியிடம்
சரண் கிடைக்க வேண்டுமம்மா