Theendum Dhooram Song Lyrics
| Movie Name | Theendum Dhooram Reprise |
| Song Name | Theendum Dhooram |
| Actors | —– |
| Music | Ritchie |
| Singers | —– |
| lyricist | Raymond Pius |
| Movie Release date | 2023 |
Lyrics in தமிழ்
Theendum Dhooram Song Lyrics in Tamil
தீண்டும் தூரம் தாண்டி போனால்
நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்
வேறு வானம் சூடிக்கொண்டாய்
பருவமே ஏன் கலைகிறாய்
உன் ஞாபகம் என்னை தேட
உனக்காக நான் ஏங்கினேன்
வலிக்காமலே என்னை கொல்கிறாய்
என் சிறகை எரிக்கிறாய்
தீண்டும் தூரம் தாண்டி போனால்
நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்
போதை போல் தோன்றும்
நாம் வாழ்ந்த காலங்கள்
கண்ணீரிலே பார்த்தேன்
அவை யாவும் மாயங்கள்
நீரில்லா தோட்டம்
வெறும் முட்கள் தானடி
நீ இல்லா வாழ்வில்
விதவை நானடி
ஆறாத ரணமாய்
என் காலை மாறுதே
தீக்குள்ளே நிலவாய்
என் இரவும் நீளுதே
நீ இன்று வேண்டும்
உன் காதல் ஒன்றே போதும்
வலித்தாலும் இன்பம் நீயடி
உன் ஞாபகம் என்னை தேட
உனக்காய் நான் ஏங்கினேன்
வலிக்காமலே என்னை கொல்கிறாய்
என் சிறகை எரிக்கிறாய்
அஹோ… ஓஓ… ஓஓ… ஹோ…
அஹோ… ஓஓ… ஓஓ… ஹோ…