Ulaa Song Lyrics in Tamil (உலா) | Album Song

Ulaa Song Lyrics

Movie NameAlbum Song
Song NameUlaa (உலா)
ActorsFJ, Subixha
MusicHari krishanth S
SingerHari krishanth S, Aarthi
lyricistTamil mani
Movie Release date2022
Lyrics in தமிழ்

Ulaa Song Lyrics in Tamil

உலா ஒரு முக உலா

உயிரெங்கும் விழா

உடையுது நிலா

 

இலா அளவினில் இல்லா

அழகொன்று உண்டா!

குழம்புது கொலா

 

விழாமல் மிதக்கிறேன்

ஓரே நாளில் வசிக்கிறேன்

உன்னோடு இருக்கையில்

எனை ரசிக்கிறேன்

 

உலா இரு முக உலா

உயிரெங்கும் விழா

உடையுது நிலா

 

இலா அளவினில் இல்லா

அழகொன்று உண்டா!

குழம்புது கொலா

 

வினா ஒன்று

திகை திகை திகைப்பது

நிமிருதே!

 

வெயில் மழை இரண்டும் ஒன்றாகுதே

போகும் தூரங்கள் போகலாம்

அதில் வாழந்த நேரங்கள் போதுமே!

 

மேகம் நீராகிப் போகலாம்

அதில் வானம் எங்கேயும் நீந்துமே!

 

வார்த்தைகள் போதாது

வாழ்க்கைக்கும் தீராது

காதல் நீ என் கண்ணில் நானே!

 

ஏ ஹே! யார் என்ன ஆனாலும்

வேர் எங்கே போனாலும்

நாம் செய்து நாம் இங்கே நானே!

 

திறா! இமை திறக்கிறாள்

சிறு சிறு சிரிப்பிலே

சிறையடைக்கிறாள்

 

தரா! உணர்வுகள் தரா

குளிர் நுழைக்கிறாய்

கொடை பிடிக்கிறாய்

 

வராத கவிதைகள்

ஒரே மூச்சினில் பொழியுதே!

தொடாமல் தொடுகிறாய்

நடை மறக்கிறேன்

நடை மறக்கிறேன்

 

நநநான நநநான

நநநான நநநான

நநநான நானநானநான

 

YouTube – Links

Leave a Comment