Vizhiyin Oliyil Song Lyrics
Song | Vizhiyin Oliyil (விழியின் ஒளியில்) |
Movie Name | William Back / வில்லியம்ஸ் பேக் |
Actors | Dougie Douglas , Kamalini Jayakumar, Rohan, Johny adriyan |
Music | Yuvan Karthik |
Singer | V.M. Mahalingam |
lyricist | Tamil mani |
Movie Release date | 2022 |
Vizhiyin Oliyil Song Lyrics in Tamil
விழியின் ஒளியில்
விடியும் இருள்கள்
விதியின் மடியில்
நகரும் மணிகள்
இதுவா பயணம்
இரண்டாம் ஜனனம்
அகமே துணையாய்
அலையும் புதினம்
நானே நானோ
யாரின் கூறோ
ஏனோ இப்போரோ
யாரென்று ஓடுதோ
வாழ்ந்தே போன
வாழ்கை எல்லாம்
மீண்டும் முன்னே வந்து
நியாங்கள் தேடுதுதோ
என் பிரபஞ்சம்
மெதுவாய் புலர்கிறதே
பின்னோக்கி ஓடுதே…
நான் பிறந்த பயனை
அடைந்து விட
தேகம் கூச்சல் போடுதே
என் குருதி நரம்பில்
முடிந்த படலம்
இப்போது வாழுதே
முன் வினைகள் அனைத்தும்
விடைகளை கேட்டு
ஆட்டம் ஆடுதே…
நதிகள் கரைகளை
திறக்கிறதே
நடந்த தடயங்கள்
கிடைக்கிறதே
உடைந்த சிலைகளின்
விரிசலெல்லாம்
நேற்ரை திறக்கிறதே…
தொலைந்த கனவுகள்
வருகிறதே
இழந்த வலிகளோ
எறிகிறதே
கொடுத்த கடன்களை
திருப்பிடவே
வேட்டை நடக்கிறதே..
நெஞ்சே வென்று போவாய் வீரமே
வாஞ்சை கொண்டு வாராய் தீரமே
உன்னை நீ உணர்ந்திடும்
பெரும் போரும் இதுவே…
நெஞ்சே வென்று போவாய் வீரமே
வாஞ்சை கொண்டு வாராய் தீரமே
உன்னை நீ உணர்ந்திடும்
பெரும் போரும் இதுவே…
காலம் காயம் தோண்டும் நேரம்
மாயச்சாம்பல் நீங்கும் தூரம்
மாறும் வேதம் உண்மை ஆகுதே…
என் பிரபஞ்சம்
மெதுவாய் புரளுகிறதே
பின்னோக்கி ஓடுதே…
நான் பிறந்த பனை
அடைந்து விட
தேகம் கூச்சல் போடுதே
என் குருதி நரம்பில்
முடிந்த படலம்
இப்போது வாழுதே
முன் வினைகள் அனைத்தும்
விடைகளை கேட்டு
ஆட்டம் ஆடுதே…
விழியின் ஒளியில்
விடியும் இருள்கள்
விதியின் மடியில்
நகரும் மணிகள்
இதுவ பயணம்
இரண்டாம் ஜனனம்
அகமே துணையாய்
அலையும் புதினம்