Yethanai Yethanai Song Lyrics
Movie Name | Ji / ஜீ |
Song Name | Yethanai Yethanai |
Actors | Ajith Kumar, Trisha |
Music | Vidyasagar |
Singer | Shankar Sampoke |
lyricist | Yugabharathi |
Movie Release date | 2005 |
Yethanai Yethanai Song Lyrics in Tamil
எத்தனை எத்தனை
நீண்ட இரவுகள்
என்றைக்காவது விடியாதா
எத்தனை எத்தனை
கோடி கவலைகள்
என்றைக்காவது முடியாதா
அழுது அழுது தூர்ந்த விழியில்
எப்படி எப்படி கனவு வரும்
பொழுது முழுதும் தீர்ந்த பிறகு
எப்படி எப்படி நிலை உயரும்
இணையும் கைகள் வெளுக்கும் போது
இரவில் கூட விடியல் வரும்
அச்சம் தவிர பழகு பழகு
துச்சம் துயர் என பழகு பழகு
உச்சம் தாயகம் என்று
லட்சியம் அடைய பழகு
பழகு பழகு
அணுவை உடைக்க பழகு பழகு
புதுமை படைக்க பழகு பழகு
வித்தை பழகும் பொழுது
விழு புண்ணும் பழகு
பழகு பழகு
இறுகி இறுகி போன இரவை
இன்னும் பொறுத்தல் முறை இல்லை
இறுதி வரையில் வாழ்வை நொந்து
இறந்து போவதில் பலன் இல்லை
உறுதியோடு நாளும் உழைத்தால்
உலகம் நமக்கு பெரிதில்லை
இன்னொரு இன்னொரு தூய விடுதலை
அன்னை பூமியை தழுவாதா
தன்னலம் அற்றவர் தோன்றும்
அரசியல் மண்ணில் பூவென மலராதா
செயலை முதலில் நீ தொடங்கு
இமயம் உனக்கு கீழ் இருக்கும்
புயலை மனதில் நீ எழுப்பு
புதிய திசைகள் தாள்திறக்கும் உலகம்
உனது பேரை சொல்ல வெற்றி சங்கு
இசை அமைக்கும்
அச்சம் தவிர பழகு பழகு
துச்சம் துயர் என பழகு பழகு
உச்சம் தாயகம் என்று
லட்சியம் அடைய பழகு
பழகு பழகு
நமது நமது நாளை நமதே என்னும்
பொய்கள் விலகிவிடும்
எமது எமது யாவும் எமதே
என்னும் உண்மை
அருகில்வரும் இனிது இனிது வாழ்வும்
இனிதே இங்கே இன்றே தெரியவரும்