Aaruyire Song Lyrics in Tamil | Raththam

Aaruyire Song Lyrics

Movie Name Raththam
Song Name Aaruyire
Actor Vijay Antony, Nandita
Music Kannan Narayanan
Singer Ravi G
lyricist Chandru
Movie Release date 06.10.2023

Aaruyire Song Lyrics in Tamil

ஆருயிரே என் ஆருயிரே

என் இதயம் என்றும் நீயே என்னுயிரே

ஆருயிரே என் ஆருயிரே

என் வாழ்வின் அர்த்தம் நீயே என்னுயிரே

 

உறவெனும் நூலிழையில்

ஊஞ்சல் போல ஆடினேன்

தொலைந்த என் நாட்கள் தேடி

தொலைந்து தானே போகிறேன்

 

வலி இங்கே வாழ்வானால்

முடிவொன்றே வரமாகும்

 

ஆருயிரே என் ஆருயிரே

என் இதயம் என்றும் நீயே என்னுயிரே

 

கண் மூடினால் நினைவு தோன்றுதே

கண்ணீரிலே நாட்கள் நீளுதே

சிறகு முறிந்த பறவையாய்

நானும் ஆகிறேன்

 

பறக்கும் நினைவை மறந்து நானே

தரையில் விழுகிறேன்

நித்தம் நித்தம் மெளன யுத்தம்

நெஞ்சுக்குள்ளே நான் போட

 

ஆருயிரே என் ஆருயிரே

என் இதயம் என்றும் நீயே என்னுயிரே

 

வாழ்வென்பது கானல் நீரம்மா

கனவாகவே அது கலைந்து போகுமா

பேசி தீர்த்த நாளெல்லாம் நினைவில் தீருமா

காலம் பிரித்த உறவெல்லாம் இதயம் தாங்குமா

 

கண்ணே நீ கலங்காதே

நான் இருப்பேன் உனக்காக

 

ஆருயிரே என் ஆருயிரே

என் இதயம் என்றும் நீயே என்னுயிரே

ஆருயிரே என் ஆருயிரே

என் வாழ்வின் அர்த்தம் நீயே என்னுயிரே

 

உறவெனும் நூலிழையில்

ஊஞ்சல் போல ஆடினேன்

தொலைந்த என் நாட்கள் தேடி

தொலைந்து தானே போகிறேன்

 

ஆருயிரே என் ஆருயிரே

என் இதயம் என்றும் நீயே என்னுயிரே

 

YouTube-Links

Leave a Comment