Adi Aathi Song Lyrics in Tamil | Siren

 Adi Aathi Song Lyrics

Movie Name Siren
Song Name  Adi Aathi
Actor Jayam Ravi, Anupama Parameshwaran, Keerthy Suresh
Music G.V. Prakash Kumar
Singer Anthony Daasan, Sinduri Vishal
lyricist Murugan Manthiram
Movie Release date 16.02.2024

 Adi Aathi Song Lyrics in Tamil

சின்ன மொட்டு ஒன்னு பூத்து இப்பம்

வெட்கப்படும் ஜோரு

வண்ண பொட்டு வச்சி

பூவு வச்சி நிக்கிறத பாரு

 

வாழ மர தோரணமா

வாச நட பாதைங்க

சீர் வரிச ஊர்வலமா

சொந்த பந்தம் சேருங்க

 

கூடி வாங்க பொண்ணுகளே

கொலவய போட்டு ஆடுங்க

மாடி வீடு கட்டித்தரும்

மாப்பிள்ள வேணுன்னு கேளுங்க

 

பளபளப்பும் கூடிச்சா

மினுமினுப்பும் ஏறிச்சா

கண்ணாடியில் உன்ன நீயும்

பாக்கிறப்போம் தோனிச்சா

 

பத்திரமா இருந்துக்க

பக்குவமா நடந்துக்க

கண்ட கண்ணும் பட்டா தப்பு

கண்மணியே ஏத்துக்க

கண்ணத்துல பூத்துக்க

 

அடியாத்தி அடியாத்தி

ஆளான பேத்தி

ஆகாசமே கண்ணு வைக்க

பொங்கி நிக்கும் பருத்தி

 

ஊராடுற வாய கொஞ்சம்

உள்ள பூட்டி வையி

வாலாட்டுற வேலையெல்லாம்

வேணா தள்ளி வையி

 

காலாடுற கொலுசுக்குத்தான்

பூத்த கத சொல்லு

மேலாடுற சட்ட துணிய

லூசா தைக்க சொல்லு

 

சாத்திரத்த சொல்லி உன்ன

பூட்டி வைக்கும் ஊரு

ஏத்துக்காத பெண்ணே நீயும்

எதித்து கேள்வி கேளு

 

உண்மையிலே பெண்ணிந்தான்

படைக்கிற கடவுள்

ஆணக்கூட பொம்பளதான்

சுமக்கணும் கருவில்

 

தீட்டு என்று தள்ளி வைக்கும்

வேலையத்த ஊரு

சாத்திரத்த கொள்ளி வச்சி

உன் வேலைய பாரு

 

பளபளப்பும் கூடிச்சா

மினுமினுப்பும் ஏறிச்சா

கண்ணாடியில் உன்ன நீயும்

பாக்கிறப்போம் தோனிச்சா

 

பத்திரமா இருந்துக்க

பக்குவமா நடந்துக்க

கண்ட கண்ணும் பட்டா தப்பு

கண்மணியே ஏத்துக்க

கண்ணத்துல பூத்துக்க

 

அடியாத்தி அடியாத்தி

 

யே… அடியாத்தி அடியாத்தி

 

YouTube-Links

Leave a Comment