Kaatril Aadum Deepam Song Lyrics in Tamil (காற்றில் ஆடும் தீபம்) | Kaarottiyin Kaadhali / காரோட்டியின் காதலி

Kaatril Aadum Deepam Song Lyrics 

Movie Name Kaarottiyin Kaadhali / காரோட்டியின் காதலி
Song Name Kaatril Aadum Deepam (காற்றில் ஆடும் தீபம்)
Actors Elango Kumaravel, Janaki Devi
Music N.R. Raghunanthan
Singer Ravi G
lyricist Yugabharathi
Movie Release date 2022
Lyrics in தமிழ்

Kaatril Aadum Deepam Song Lyrics in Tamil

காற்றில் ஆடும் தீபம் போல

கண்ணில் தோன்றும் உறவே!

நீலம் பூத்த வானம் போல

நெஞ்சில் நீந்தும் நினைவே!

 

ஏழை வீடு என அறிந்தும்

கோலம் போடும் நிலவொளியே!

முள்ளில் தூக்கி எறியையிலும்

பூவாய் ஆகும் ஒரு விதையே!

 

வெட்டவெளி பாதையிலே

வரும் உன் நினைவு மோதிடுதே!

கொத்துகிற பாம்பெனவே

கொண்ட நேசம் உயிர் வாங்கிடுதே!

 

காற்றில் ஆடும் தீபம் போல

கண்ணில் தோன்றும் உறவே!

நீலம் பூத்த வானம் போல

நெஞ்சில் நீந்தும் நினைவே!

 

நீரிலே பால் நிலா மூழ்கிய போதிலும்

ஈரமே ஆவதே இல்லையே!

காகித பூவிலும் வாசனை உண்டென

வாழ்வது பாவம் இல்லையே!

 

கல்லும் ஒரு கோயில் சேர

தெய்வமாகுதே!

உள்ளே எழும் நேசத்தாலே

பூமி வாழுதே!

 

சொல்ல முடியா சொந்தம் உனையே

தள்ளி விட மாட்டேனே!

உள்ள வரையில் உன்னை நினைத்தே

நட்சத்திரம் பார்பேனே!

 

கோடையில் நீரையையும்

வாடையில் தீயையும்

தேடியே வாழ்க்கை ஓடுதே!….

 

சாம்பலே ஆயினும்

நெற்றியில் சேரயில்

பூசையாய் மாறிப்போகுதே…

 

எல்லைகளை தாண்டும் காலம்

உனைச் சேருதே!

புல்லின் நுனி மேலே கூட

தூரல் தேங்குதே!

 

கண்கள் அறியா சித்திரங்களை

என்னுயிரும் காணாதோ!

சுத்தும் உலகில் அன்பின் அழகே

சொந்தமென ஆகாதோ!

 

காற்றில் ஆடும் தீபம் போல

கண்ணில் தோன்றும் உறவே!

நீலம் பூத்த வானம் போல

நெஞ்சில் நீந்தும் நினைவே!

 

YouTube – Links

Leave a Comment