Kadhalai Kollum Song Lyrics in Tamil | Munthirikaadu

Kadhalai Kollum Song Lyrics

Movie Name Munthirikaadu
Song Name Kadhalai Kollum
Actor Pugazh, Subapriya
Music A.K.Priyan
Singer Jayamoorthy
lyricist Ilaya Kamban
Movie Release date 2024
Lyrics in Tamil Lyrics in English

Kadhalai Kollum Song Lyrics in Tamil

காதலை கொல்லும் சாதியே

உனக்கொரு சாவு வரதா…

சாவு வரதா…. சாவு வரதா…

 

காதலை கொல்லும் சாதியே

உனக்கொரு சாவு வரதா…

இந்த காதலர்கள் சிந்தும்

கண்ணீர் துளிக்கும் தீர்வு வரதா

 

தலைவிரித்தாடும் ஆணவ சாதி

மடிந்து விடாதா

காதல் தலைமுறை மூட்டும்

தீயில் மனமும் கருகிவிடாதா

 

கண்ட துண்டமாய் வெட்டினாலும்

உயிர் காதல் வெல்லும்

நீ கருவறுத்தாலும் காதல் வென்ற

காதல் வென்ற சரித்திரம் சொல்லும்

 

காதலை கொல்லும் சாதியே

உனக்கொரு சாவு வரதா

இந்த காதலர்கள் சிந்தும்

கண்ணீர் துளிக்கும் தீர்வு வரதா

 

ஆதிக்கத்தின் அடிமை விலங்கை

காதல் அடித்து நொறுக்கும்

சாதி அடக்கு முறையின் இடுப்பை முறிக்க

காதல் புரட்சி வெடிக்கும்

 

கோத்திரம் சூத்திரம் சாத்திரம் பார்த்து

காதல் வந்து விடுமா

நீ ஆத்திரம் கொண்டு அழிக்க நினைச்சா

அடங்கி ஒடுங்கி விடுமா

 

சமத்துவத்தை மனிதனுக்குள்

காதல் தான் விதைக்குமடா

அது சாதி பூக்கும் ஆயுதங்களை

மண்ணைத் தோண்டி புதைக்குமடா

மண்ணைத் தோண்டி புதைக்குமடா

 

காதலை கொல்லும் சாதியே

உனக்கொரு சாவு வரதா

இந்த காதலர்கள் சிந்தும்

கண்ணீர் துளிக்கும் தீர்வு வரதா

 

காதல் முன்பு சாதியே உந்தன்

சட்டம் என்ன செய்யும்

உன் காட்டுமிராண்டி சாதித் திமிரு

காதல் முன்பு மடியும்

 

எல்லா உயிர்க்கும் காதல் உண்டு

இயற்கை வகுத்த நியதி

அதை இடையில் நின்று தடக்க

எவனக்கும் இல்லை இங்கு தகுதி

 

சாதி மதம் பார்க்காத

காதல் ஒரு புனிதமடா

சாதி தறுதலைகள் திருந்திவிட்டால்

தலை நிமிறும் மனிதமடா

தலை நிமிறும் மனிதமடா

 

காதலை கொல்லும் சாதியே

உனக்கொரு சாவு வரதா

இந்த காதலர்கள் சிந்தும்

கண்ணீர் துளிக்கும் தீர்வு வரதா

 

YouTube-Links

Leave a Comment