Kammakkarai Kaaththu Song Lyrics in Tamil | Tamil Album Songs

Kammakkarai Kaaththu Song Lyrics

Movie Name Tamil Album Songs
Song Name Kammakkarai Kaaththu
Music Shakthi
Singers Henry
lyricist Raja Gurusamy

Kammakkarai Kaaththu Song Lyrics in Tamil

ஏலேலோ ஏலேலோ ஏலலேலோ

ஏலேலோ ஏலேலோ ஏலலேலோ

 

கம்மாக்கரக் காத்தே

கொஞ்சம் கேட்டேன்னு சொல்லு

சம்ப நெல்நாத்தே

கொஞ்சம் கேட்டேன்னு சொல்லு

 

பஞ்சு மேகங்களே

கேட்டேன்னு சொல்லு

பஞ்சரத்து கோழிக்குஞ்சே

கேட்டேன்னு சொல்லு

 

நெஞ்சுக்குள்ள நிறைஞ்சவர

நேசம் வைக்க புறந்தவர

எண்ணத்துல நுழைஞ்சவர

என்னக் கட்டி புடிச்சவர

 

காணாம தேடுது தேடுது

வாடுது வாடுது வயசு மல்லி மொட்டு

 

கம்மாக்கரக் காத்தே

கொஞ்சம் கேட்டேன்னு சொல்லு

சம்ப நெல்நாத்தே

கொஞ்சம் கேட்டேன்னு சொல்லு

 

பஞ்சு மேகங்களே

கேட்டேன்னு சொல்லு

பஞ்சரத்து கோழிக்குஞ்சே

கேட்டேன்னு சொல்லு

 

ஆத்தோரம் காத்து நிக்கும்

அய்யனாரே சொல்லு சொல்லு

சேத்தோரம் பாத்து நிக்கும்

மீன் கொத்தியே சொல்லு சொல்லு

 

ஊரோரம் தூரம் போகும்

ஊசி தட்டான் சொல்லு சொல்லு

காதோரம் தண்டட்டி போடும்

பாட்டியம்மா சொல்லு சொல்லு

 

வாழத்தண்டா வளந்த புள்ள

ஏங்குதுன்னு சொல்லு சொல்லு

அல்லிச்செண்டா வளந்த புள்ள

அழகுன்னு சொல்லு சொல்லு

 

அத்தி பழுத்த பழமா

ஐஆர் எட்டு ரகமா

அமைஞ்ச புள்ள சமைஞ்ச புள்ள

அத்தானுக்கு சொல்லு சொல்லு

 

கம்மாக்கரக் காத்தே

கொஞ்சம் கேட்டேன்னு சொல்லு

சம்ப நெல்நாத்தே

கொஞ்சம் கேட்டேன்னு சொல்லு

 

வீட்டுக்குள்ள மாவரைக்கும்

ஆட்டுக்கல்லே சொல்லு சொல்லு

தோப்புக்குள்ள கூவிநிக்கும்

பூங்குயில் நீ சொல்லு சொல்லு

 

நாத்தோரம் பதுங்கி நிக்கும்

நண்டுகளே சொல்லு சொல்லு

மேட்டோரம் வண்டி இழுக்கும்

காளைகளே சொல்லு சொல்லு

 

வெட்கப்பட ஆரம்பிச்ச

விவரத்த சொல்லு சொல்லு

மால கட்ட பூபறிச்ச

மனச நீ சொல்லு சொல்லு

 

குமரிப்புள்ள ரதமா

உன் கூட வரணும் சுகமா

பருவ புள்ள படிச்ச புள்ள

மச்சானுக்கு சொல்லு சொல்லு

 

கம்மாக்கரக் காத்தே

கொஞ்சம் கேட்டேன்னு சொல்லு

சம்ப நெல்நாத்தே

கொஞ்சம் கேட்டேன்னு சொல்லு

 

பஞ்சு மேகங்களே

கேட்டேன்னு சொல்லு

பஞ்சரத்து கோழிக்குஞ்சே

கேட்டேன்னு சொல்லு

 

நெஞ்சுக்குள்ள நிறைஞ்சவர

நேசம் வைக்க புறந்தவர

எண்ணத்துல நுழைஞ்சவர

என்னக் கட்டி புடிச்சவர

 

காணாம தேடுது தேடுது

வாடுது வாடுது வயசு மல்லி மொட்டு

 

கம்மாக்கரக் காத்தே

கொஞ்சம் கேட்டேன்னு சொல்லு

சம்ப நெல்நாத்தே

கொஞ்சம் கேட்டேன்னு சொல்லு

 

பஞ்சு மேகங்களே

கேட்டேன்னு சொல்லு

பஞ்சரத்து கோழிக்குஞ்சே

கேட்டேன்னு சொல்லு

YouTube – Links

Leave a Comment