Mudhal Muththam Song Lyrics in Tamil (முதல் முத்தம்) | Bommai / பொம்மை

Mudhal Muththam Song Lyrics

Movie Name Bommai / பொம்மை
Song Name Mudhal Muththam (முதல் முத்தம்)
Actors S.J. Surya, Priya Bhavani Shankar
Music Yuvan Shankar Raja
Singer Yuvan Shankar Raja, Shweta Mohan
lyricist Karky
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Mudhal Muththam Song Lyrics in Tamil

யாருமில்லாத மாமலை மீது

என்னோடு நீ

ஆடையில்லாத முழு நிலா

ஒளியில் நனைகின்ற நான்

 

மேனி மேல் மோதும் காற்றினை

உடைத்து தடுக்கின்ற நீ

பூமியின் மொத்த காதலை

குடிக்க துடிக்கின்ற நான்

 

உயிர் முழுதும் திரட்டி

இதழ் மீது தீ மூட்டியே

அணைத்திடவே அழைத்தேன்

உன் இதழில் தேன் கொட்டியே

 

முத்தம் முதல் முத்தம்

அது இதயம் திறக்கின்ற வழியென அறிந்திடு

முத்தம் முதல் முத்தம்

அது உயிரை பரிமாறும் குழலென புரிந்திடு

 

முத்தம் முதல் முத்தம்

அது எல்லை இல்லாத பரவசம் என உணர்ந்திடு

முத்தம் முதல் முத்தம்

தரும் நாள் திருநாளென…

 

ஏஏ…

யாருமில்லாத மாமலை மீது

என்னோடு நீ

பூமியின் மொத்த காதலை

குடிக்க துடிக்கின்ற நான்

 

ஓர் வானம் ஓர் பூமி

ஓர் வாழ்க்கை தான் நம்முன்னே

வாய் சேர்க்க நாள் பார்த்தால்

நாள் போதாது பெண்ணே

 

நீ கேட்டால் ஓர் நாளில்

கொட்டும் முத்தங்கள் ஒரு கோடி

முதல் முத்தம் அது மட்டும்

நான் கேட்கும்படி

 

நாற்பத்து மூன்று வகை முத்தம்

கலைகளில் மொத்தம்

நீ அதை கேட்கிறாய்

 

அளித்திடும் வன்மை வகை முத்தம்

வெண்மை வகை முத்தம்

என்னது பார்க்கிறாய்

 

இரெல்லாம் நொடி நாளெனாவிலே

மனப்பாடம் செய்யலாம்

இதழ் கோர்க்கும் நீரின் நாணானெலில்

ஆடை நெய்யலாம்

 

முத்தம் முதல் முத்தம்

அது இதயம் திறக்கின்ற வழியென அறிந்திடு

முத்தம் முதல் முத்தம்

அது உயிரை பரிமாறும் குழலென புரிந்திடு

 

முத்தம் முதல் முத்தம்

அது எல்லை இல்லாத பரவசம் என உணர்ந்திடு

முத்தம் முதல் முத்தம்

தரும் நாள் திருநாளெம்மா.

 

YouTube – Links

Leave a Comment