Mukkan Pudhalvane Song Lyrics in Tamil | Hindu Devotional Song

Mukkan Pudhalvane Song Lyrics

Movie Name Hindu Devotional Song
Song Name Mukkan Pudhalvane
Music Henry
Singer Super Singer Muthu Sirpi
lyricist Lovely Lakshmanan

Mukkan Pudhalvane Song Lyrics in Tamil

கண கண கண கணபதி

கண கண கண கணபதி

 

முக்கண் புதல்வனே மூத்த முதல்வனே

ஒன்ன காண வந்தோமய்யா

சித்தி முகத்தனே சக்தி மைந்தனே

நித்தம் வேண்டி நின்னோமய்யா

 

வேலம்பு ஆயுதம் பல்லாக்கு ஊர்வலம்

மூஞ்சூரு ஏறியே அருள் வாக்கு தூரனும்

தேங்காயி பூரணம் தெவிட்டாத மோதகம்

கற்பூர ஜோதியே வரமாய் வந்து சேரனும்

 

கன்னி மூல கொண்ட கணபதி

பதி பதி அதிபதி

வீர தீர சூர கணபதி

நிதி நிதி குணநிதி

 

சுண்டல் பொறிய கேட்ட

கண கண கண கணபதி

மாறும் தீரும் பாயும் கணபதி

மதி மதி மழுமதி

 

முக்கண் புதல்வனே மூத்த முதல்வனே

ஒன்ன காண வந்தோமய்யா

சித்தி முகத்தனே சக்தி மைந்தனே

நித்தம் வேண்டி நின்னோமய்யா

 

அம்மை அப்பனை சுற்றி வந்தாய்

ஞானப் பழத்தினை வாங்கி வென்றாய்

தரணி எங்கிலும் அன்பின் தீபம் ஏற்றினாய்

 

ஆத்தங்கரையிலே கோயில் கொண்டாய்

அரசமரத்தடி போதும் என்றாய்

ஐந்து கரத்திலே வரத்தை அள்ளி நீட்டினாய்

 

ஈசன் பெற்ற பாலகனே

கன்னி கடவுள் நீதானய்யா

தம்பி வேலவன் மூத்தவனே

உன்னை நம்பி வந்தோமய்யா

 

சித்த புத்த தீர்த்த கணபதி

ஜனங்களை காக்க வேணும்

மெட்டு கட்டி பாட்டு பாடுவோம்

கஜமுக கணபதி

 

தந்த சிங்க தங்க கணபதி

குறைகளை தீக்க வேணும்

மகிமை யாவும் அள்ளி தந்திடு

ஐங்கர கணபதி

 

முக்கண் புதல்வனே மூத்த முதல்வனே

ஒன்ன காண வந்தோமய்யா

சித்தி முகத்தனே சக்தி மைந்தனே

நித்தம் வேண்டி நின்னோமய்யா

 

அருகம்புல்லையே வேண்டும் என்றாய்

சங்கு கழுத்திலே தங்க வைத்தாய்

வலது கரத்திலே ஒடித்த தந்தம் ஏந்தினாய்

 

பாம்பை வயிற்றிலே கட்டி வைத்தாய்

எலியின் முதுகிலே ஏறி வந்தாய்

ஏற்றும் தீபத்தை ஏற்றுக் குறைகளை நீக்கினாய்

 

யானை முகத்தை கொண்டவனே

முற்றும் வினைகள் தீர்த்தாலென்ன

சக்தி தந்த புத்திரனே

முக்தி தனை நீ தந்தாலென்ன

 

வெள்ள எல்ல செல்ல கணபதி

கவலையை போக்க வேணும்

அப்பம் லட்டு இனிப்பு ஊட்டுவோம்

அங்குச கணபதி

 

வில்வ செல்வ அம்ப கணபதி

எங்கள பாக்க வேணும்

எருக்கம் பூவு மாலை சூடுவோம்

கற்பக கணபதி

 

முக்கண் புதல்வனே மூத்த முதல்வனே

ஒன்ன காண வந்தோமய்யா

சித்தி முகத்தனே சக்தி மைந்தனே

நித்தம் வேண்டி நின்னோமய்யா

 

வேலம்பு ஆயுதம் பல்லாக்கு ஊர்வலம்

மூஞ்சூரு ஏறியே அருள் வாக்கு தரனும்

தேங்காயி பூரணம் தெவிட்டாத மோதகம்

கற்பூர ஜோதியே வரமாய் வந்து சேரனும்

 

கன்னி மூல கொண்ட கணபதி

பதி பதி அதிபதி

வீர தீர சூர கணபதி

நிதி நிதி குணநிதி

 

சுண்டல் பொறிய கேட்ட

கண கண கண கணபதி

மாறும் தீரும் பாயும் கணபதி

மதி மதி மழுமதி

 

YouTube-Links

Leave a Comment