Rightum Oduthu Song Lyrics in Tamil | THEE-IVAN

Rightum Oduthu Song Lyrics

Movie Name  THEE-IVAN
Song Name Rightum Oduthu
Actors Navarasa Nayagan Karthick, Sunny Leaone
Music Jayamurugan T.M
Singer  AJ Alimirzaq
lyricist Jayamurugan T.M
Movie Release date 2023

Rightum OduthuSong Lyrics in Tamil

ரைட்டும் ஓடுதே

ஒன்வேயில் ராங்கும் ஓடுதே

சைவம் ரத்தம் கேக்குதே

ரன்வேயில் நாக்கு நீட்டுதே

 

லவ்வும் ஓடுதே

லவ்வோடு நஞ்சும் ஓடுதே

ரெண்டும் தப்பியோடுதே

தப்பித்தால் தொல்லை கூடுதே

 

சள்ளை நீளுதே

சாத்தானின் மூளையானதே

சண்டை போடுதே

சந்தோஷம் செத்து வாழுதே

 

பணம் பணம் ஓடாதே

குணம் இழந்து போவ

மணம் இழந்த பூவாய்

தினம் உதிர்ந்து போவ

 

இன்பம் துன்பம் இரண்டும் வருகுது

இன்னல் செய்ய இன்றே மறந்திடு

வாய்மை என்றும் வெல்லும் துணிந்திடு

வலிமை நின்று கொல்லும் வென்றிடு

 

தவற திருத்த உனக்கு விரும்பம் இல்ல

தப்பில் விழுந்த எவனும் எழுந்துதில்ல

திறமை இருந்து உழைக்க நினைக்கவில்ல

வறுமை இருந்தும் அணைக்க விரும்பவில்ல

 

மேல கத்தி தொங்கி தொடருத ஓடு

நின்னா ஒட்டம் அடங்கிடும் போதும்

வேணாம் அடங்கிடு அடங்கிடு கூலா

நீ நடந்திடுடா

ஆட்டம் போட்டும் அடங்கலடா கூட்டம்

கூட்டி அலப்பற கொடுக்கிற

ஆறறிவு ஓர் அறிவாய் மாற

ஐம்புலன்கள் உன் மதியை மீற

உயிர் எடுக்க நீ யாரு

உயிர் கொடுக்க பாரு

 

தினம் நடக்கும் போரு

துணிவுடன் நீ ஏறு

எட்டுத்திக்கும் அன்பை விதைத்திடு

எட்டிப்பாக்கம் வன்மம் புதைந்திடு

குட்டிச் சுவரை எட்டி உதைந்திடு

சுற்றம் முற்றம் அன்பாய் இருந்திடு

 

கடல கடக்கும் பறவ விழுந்ததில்ல

உடல கடக்கும் உசுரு திரும்பவில்ல

மனத அடக்கும் மனிதன் அழிந்ததில்ல

மரணம் இருக்கு தெரிஞ்சம் அடக்கமில்ல

 

வாழ்க்கன்னு இருந்தா

நீ ஓடி தாண்டு வேணுன்டா

பயத்த தூக்கி போடடா

போராடி வாழப்பாருடா

 

துள்ளி ஓடடா

உன்னோட உண்மை காட்டுடா

வாடா வெல்லும் ரூட்டுடா

நீ ஓடி வெற்றி நாட்டுடா

 

ஸ்பீடு ஏத்துடா

உன்னோட பீலு மாத்துடா

தோளா நம்ம மாத்துடா

நிக்காம வீசும் காத்துடா

 

சுடசுடத்தான் தங்கம்

வலி பொறுத்து போடா

படபடத்தான் வாழ்க்கை

பலம் கொடுக்கும் வாடா

 

செய்யும் தர்மம் உன்னை உயர்த்திடு

உந்தன் வேர்வை வெற்றி கொடுத்திடும்

மண்ணை முட்டிடும் ஜீவன் முளைத்திடும்

தன்னை தந்தால் உன்னை வளர்த்திடும்

 

உலகம் சுழல உயிர்கள் நிலைக்குதடா

இரவும் பகலும் இதனால் நகருதடா

மறந்தால் மனதில் மனிதம் இருக்குதடா

மனிதன் செயலால் உலகம் சிறக்குதடா

 

சாத்தான் சாத்தான் சாத்தான்

 

YouTube-Links

Leave a Comment