Thaalaatu Song Lyrics in Tamil | Kuthiraivaal

Thaalaatu Song Lyrics

Movie Name Kuthiraivaal / குதிரைவால்
Actors Kalaiyarasan, Anjali Patil
Music Pradeep Kumar
Singer Lalitha Vijaykumar, Priyanka NK
lyricist Sathish Raja Dharmar
Movie Release date ———–

Thaalaatu Song Lyrics in Tamil 

ஆரரோ ஆரிரோ ஆரரோ ஆரிரோ

ஆரரோ ஆரிரோ ஆரரோ ஆரிரோ

 

ஆரரோ ஆரிரோ ஆரரோ ஆரிரோ

 

நெளியுங் கானலில

மொகங் காட்டும் செங்குருத்தே

வெளியெல்லா எட்டு வைக்க

எட்ட போகும் கானலல்லோ

 

வலியா உருவெடுத்து

வந்த சீவன் இங்க நிக்க

உசிரா வொனப் பாக்க உச்சி

வானம் நோக்கனும்மா

 

நெலந்த கூறு வைக்க

நெஞ்சம் குறுகிப் போக

பொழைச்சேன் பொழைச்செனுன்னு

வாழாத இந்த சனமே

 

வாழாத இந்த சனமே

 

இன்னைக்கு உம் பேரு….?

 

ராமு… உம் பேரு…?

 

நீலி!

 

தப்பாட்டம் ஆடுற…

ஒரே பேர எம்புட்டு நாள்தான வச்சிருப்ப

எனக்கு புடிச்ச பேர நான் வச்சிருக்கேன்

புடிச்ச பேர வைக்கனு நீ தான பேசிக்கிட்டோம்

நீலிதான நம்மூர் கேணியில விழுந்து ரெக்க மொளச்சி பறந்தா…?

நானும் வானத்துல பறக்கனும்

 

சொல்ல தலைக்கு வச்சு

சொப்பனம் சேரையில

நில்லாம நீ வா சாமி,

வந்திங்க சாய்ஞ் சொறங்கு!

 

வந்திங்க சாய்ஞ் சொறங்கு!

நீ வந்திங்க சாய்ஞ் சொறங்கு!

 

கரடல்லாம் எட்டு வச்சு

காடெல்லாம் நீயோடி

சிரிச்ச மொக மெடுத்து

செலையா நீ அமைஞ்ச தெனம்

 

எட்டு வச்ச தடமெல்லாம்

நீலாம்ப பூத்து நிக்க

இங்கனையா வானமின்னு

மேகமெல்லாம் வந்திறங்க

 

மேகமெல்லாம் வந்திறங்க

 

ரெக்கைய தொளவிட்டு

வெறும் வானம் அளக்காம

யெறங்கி இங்கன வா

பூந்தரையில நீ ஒறங்கு

 

நீல பூந்தரையில நீ ஒறங்கு

 

நீல பூந்தரையில நீ ஒறங்கு

 

Youtube – Links

Leave a Comment