Thala Saanjuruche Song Lyrics in Tamil | Raavana Kottam / ராவண கோட்டம்

Thala Saanjuruche Song Lyrics

Movie Name Raavana Kottam / ராவண கோட்டம்
Song Name Thala Saanjuruche
Actors Shanthnu, Anandhi
Music Justin Prabhakaran
Singers Anthony Daasan, Madurai Chandran
lyricist K. Ekadesi
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Thala Saanjuruche Song Lyrics in Tamil

தல சாய்ஞ்சிருச்சே

அட நாடு ஏங்கிருச்சே

சாமியெல்லாம் செத்துபோனா

கோயிலத்தான் என்ன செய்ய

சொல்லுங்கடா என் அப்பேன்…

 

மன்னாதி மன்னருதான் எங்க அய்யா

அவர் மரியாத குறையாத சிங்கமய்யா

அவர் மரியாத குறையாத சிங்கமய்யா

 

அஞ்சாத சிங்கன்டா எங்க அய்யா

அட அய்யானாரு சாமிடா எங்க அய்யா

அட அய்யானாரு சாமிடா எங்க அய்யா

அட அய்யானாரு சாமிடா எங்க அய்யா

 

குணிஞ்சிதான் கிடந்தவன

அட நிமிந்துதான் நடக்க வச்சாரு

 

ஊரு ஊருன்னு  நெஞ்சில் சுமந்த அய்யா

இப்ப உறங்கித்தான் போனாரு

இப்ப ஊர்வலம் போறாரு

அட உசரமா போறாரு

 

கொடி கட்டி வாழ்ந்தவரு

அட கோடி சனம் பார்த்தவரு

வாயில்லா சீமனுக்கும்

ஒரு வரம் தந்தம் காத்தவரு

 

வீராதி வீரன்டா எங்க அய்யா

ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா

ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா

ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா

 

சீறிடும் சிறுத்தடா எங்க அய்யா

எங்கள காக்கிற சாமிடா எங்க அய்யா

எங்கள காக்கிற சாமிடா எங்க அய்யா

எங்கள காக்கிற சாமிடா எங்க அய்யா

 

சமுதாய காவலரு

எங்க சரித்திர நாயகரு

சுத்தமான சொல்லு கொண்ட அய்யா

இப்பம் போறாரு மண்ணடிச்சி

 

நாங்க வணங்குறோம் கால தொட்டு

கொட்டும் மேளத்த வெளுத்து கட்டுடா

 

நேருக்கு நேர நின்னு

அட பேசிடும் ஆளு இவரு

நட்புக்கு பேரு போன

எங்க நம்பிக்கையானவரு

 

தேசாதி தேசமெல்லாம்

கேட்டுக்கிட்டு அழுகுதையா….

எப்பா போயிட்டியப்பா

 

தேசாதி தேசமெல்லாம்

கேட்டுக்கிட்டு அழுகுதையா…

எடுத்துக்கெடா எங்க உசிர

கொடுத்திருடா அய்யா உசிர

 

மண்ணவிட்டு போற தூரம்மா

அய்யா உன்ன விட்டு ஊருக்கு மக்கா

 

ஏ புளுத்து போன ஊருக்குள்ள

கோபுரமா போறியிரியளே

என் பெத்த அப்பா

எழுந்திருச்சி வாப்பா

 

ஏ புளுத்து போன ஊருக்குள்ள

கோபுரமா போறியிரியளே

எங்கதான் அவசரம்ப்பா

எங்கள விட்டு போறியய்யா

தேரு மேல போனவரே

எங்க தேத்ததறது யாரு அய்யா

அய்யா

 

சித்தம் கலங்குதடா

இரத்தம் கொதிக்குதடா

யுத்தம் புரிந்திடுவோம்

வாடா வாடா வாடா

 

பாராட்டு

பெற்றவரு

பல ஊரு

காத்தவரு

 

எங்கள விட்டு

எங்கய்யா போறாரு

எங்கய்யா போறாரு

எங்கய்யா போறாரு

எங்கய்யா போறாரு….

 

நக்கி புழைக்கவில்ல

பிச்சை எடுக்கவில்ல

மோதித்தான் பாத்திருவோம்

வாடா வாடா வாடா

 

மாப்பிள்ளா

போறார்டா

மாறல்தான்

வாறார்டா

ஏறாத

தேர் எறி

எங்கய்யா

போறாக

 

காத்தெல்லாம் ஒப்பாரி

கருங்கெல்லாம் கண்ணீரு

அதிகாரம் பாஞ்சிருச்சே

ஒரு சதி ஒன்னு நடந்திருச்சே

 

அட பூவாசம் உள்ள ஊரு

இப்பம் புண வாசம் ஆயிருச்சே

 

மன்னாதி மன்னருதான் எங்க அய்யா

அவர் மரியாத குறையாத சிங்கமய்யா

அவர் மரியாத குறையாத சிங்கமய்யா

அவர் மரியாத குறையாத சிங்கமய்யா

 

வீராதி வீரன்டா எங்க அய்யா

ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா

ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா

ஒரு வேஷம் தான் போடாத தங்கம் அய்யா

 

நாதியத்து… போனமடா…

நாதியத்து போனமடா

குலசாமி போகுதடா

நம்ம குலசாமி போகுதடா

 

குலசாமி போகுதடா

நம்ம குலசாமி போகுதடா

குலசாமி போகுதடா

நம்ம குலசாமி போகுதடா

 

குலசாமி போகுதடா

நம்ம குலசாமி போகுதடா

குலசாமி போகுதடா

நம்ம குலசாமி போகுதடா

 

குலசாமி போகுதடா

நம்ம குலசாமி போகுதடா

குலசாமி போகுதடா

நம்ம குலசாமி போகுதடா

 

YouTube – Links

 

Leave a Comment