Thalayyaatti Pesurappo Song Lyrics in Tamil | Thandatti

Thalayyaatti Pesurappo Song Lyrics

Movie Name Thandatti
Song Name Thalayyaatti Pesurappo
Actors Pasupathy, Rohini, Vivek Prasanna, Ammu Abhirami
Music Sundaramurthy KS
Singers R.Guru Ayya Durai
lyricist Yegathasi
Movie Release date 2023

Thalayyaatti Pesurappo Song Lyrics in Tamil

தலையாட்டி பேசுறப்போ

தண்டட்டிக் காதழகு

தண்டட்டி போட்ட புள்ள

வீரபாண்டி தேரழழு

 

விழுதாடும் கிளிபோல

காதோட அது தொங்கும்

தண்டட்டி கதையக்கேளு

தென்னாட்டு நிலமெங்கும்

 

பொறந்தப்போ காதுகுத்தி

போட்டுவிட்ட தண்டட்டி

பொறந்தப்போ காதுகுத்தி

போட்டுவிட்ட தண்டட்டி

 

வாழ்க்கை கடைசி வரை

கூட வரும் கைகட்டி

வாழ்க்கை கடைசி வரை

கூட வரும் கைகட்டி

 

கழுத்து நீண்ட பொம்பளைக்கு

காத்திலாடும் தண்டட்டி

ஆளு கொஞ்சம் குட்டையின்னா

தோளத்தட்டும் தண்டட்டி

 

ஆட்ட மாட்ட வித்துக்கூட

வாங்கி தந்த தண்டட்டி

அப்பன் ஆத்தா போலத்தான

கூடருக்கும் தண்டட்டி

 

தரத்துல ஒசந்த நக

தண்டட்டிதான பாரு

ஒரு சிற்பம் போல தண்டட்டிய

செஞ்சவன்தான் யாரு

 

எட்டுத்திக்கும் தமுக்கடிக்கும்

தங்கத்த நீ பாரு

அட எறும்பு சுத்தி பாக்குனுன்னா

வாங்கணுன்டா காரு

 

காது வளத்த பொம்பளைக்கு

கண்ணுபடும் அழகிருக்கும்

காசளவு வளத்த காதில்

நெலா பார்க்க எடமிருக்கும்

 

பிள்ளப்பெறும் கஷ்டம் போல

காது ரெண்ட வளக்கணுமே

தண்டட்டிதான் போட்ட பொண்ண

சாமியாத்தான் மதிக்கணுமே

 

காடு கர வேலையிலும்

கருத்திடாத தண்டட்டி

காது துட்டு இல்லனாலும்

கழட்டிடாத தண்டட்டி

 

திருச்சி மதுர தேனியெல்லாம்

வீட்டுக்கொரு தண்டட்டி

திரும்புகிற தெசையெல்லாம்

திரியுமிங்க தண்டட்டி

 

அந்த காலம் அத்த மவ

தண்டட்டிதான் போட்டா

ஒரு மார்க்கமாக ஆம்பளைங்க

நிப்பாய்ங்களே கூட்டா

 

மூளிக்காது பொம்பளையும்

தண்டட்டிதான் கேட்டா

அவ மூடிவச்ச மறைக்காம

பாடுறேனே பாட்டா

 

அய்யனாரு அரசன் மாரு

இவுகளுக்கும் நீண்ட காது

ஆம்பளைக்கும் அழகிருக்கும்

தண்டட்டிய போட்ட போது

 

காத்துக் கருப்பு அண்டாது

கருப்பனோட பேரச்சொன்னா

தாட்டியந்தான் வந்துருமே

 

தண்டட்டிய போட்டு நின்னா

கட்டமீசைக் காரனுக்கும்

போட்டியிந்த தண்டட்டி

 

கார வீட்டுக்காரி காதில்

தூளியாடும் தண்டட்டி

அப்பன் வீட்டு சீதனமா

அணிஞ்சி வரும் தண்டட்டி

 

ஓரஞ்சாரம் நின்னாக்க கூட

ஊரு பாக்கும் தண்டட்டி

 

YouTube – Links

Leave a Comment