Thamarai Poovilum Song Lyrics
Song Name | Thamarai Poovilum |
Actors | Priya Hegde, Ravi Mahadhasyam |
Music | Ram Muthiah |
Singers | Harini Tipu |
lyricist | Thavakkumar L |
Movie Release date | 2023 |
Thamarai Poovilum Song Lyrics in Tamil
தாமரை பூவிலும்
மெல்லிய இதயம்
சாய்விட்டதடா
உன் முக வடிவம்
வானிலை மாற்றிடும்
மயக்கத்தின் தாகம்
வாழவேண்டுமடா
உன்னுடன் நானும்
கண்ணனின் குழலாய்
கன்னியின் மனதில்
என்று நீ நுழைந்தாயோ
மஞ்சளின் ஒளியாய்
நெஞ்சினில் விழுந்தாய்
என்னில் நீ உதிப்பாயோ
தாமரை பூவிலும்
மெல்லிய இதயம்
சாய்விட்டதடா
உன் முக வடிவம்
பார்த்திடும் போது மறைந்தேனே
பழகிடும் நேரம் கரைந்தேனே
ஏழு வண்ண வானவில்லாய் எழுகிறேனே
இமைத்திடும் வேளை பிரிந்தாலே
இதயமும் நோகும் தன்னாலே
அன்பின் ஆழம் தேடி
உன்னில் மூழ்கினேனே
மனதோடு பேசுகின்றேன்
பசி தூக்கம் நீங்குகின்றேன்
உன்னை கண்டு
மலர்ந்த கண்கள் மூடவில்லை
தாமரை பூவிலும்
மெல்லிய இதயம்
சாய்விட்டதடா
உன் முக வடிவம்
தென்றலை தேடச் சொன்னேனே
மழையிடம் கூட சொன்னேனே
என்னை விட்டு தொலைந்து போன
இதயம் எங்கே
நதியிலே ஆடிச் சென்றேனே
கடலிலே ஆழம் சென்றேனே
நிழலும் கூட நீங்கிப் போன
மாயம் இங்கே
தொலை தூரமான நெஞ்சே
தொடுவானம் போனதெங்கே
களவு போன மனதை உன்னில்
நானும் கண்டேன்
தாமரை பூவிலும்
மெல்லிய இதயம்
சாய்விட்டதடா
உன் முக வடிவம்
great effort.. here i modified the exact lyrics which i wrote
We changed, Great lines… Thanks for your correction