Un Kaadhalaal Song Lyrics in Tamil | Album Song

Un Kaadhalaal Song Lyrics

Movie Name Album Song
Song Name Un Kaadhalaal
Music Santhosh Balaji
Singers Aravind Karneeswaran, Amina Rafiq
lyricist Ziya Hadhijath
Movie Release date 2023

Un Kaadhalaal Song Lyrics in Tamil

உன் காதலால் உடைந்தது கர்வம்

மெளனத்தில் மயங்கும் பெண்மணி நானும்

உன் வார்த்தையில் சிதறுது சித்தம்

கண்மணியென நீ அழைத்திட நானும்

 

மனம் அறியா புது வித ஏக்கம்

எந்தன் உயிர் வரை உன் காதலை தாக்கும்

கண்கள் அது உனை மட்டும் பார்க்கும்

எனது பெண்மை உன் அருகினில் தோற்கும்

 

கண்மணி கண்மணி ஆசை ஆசையாய் கூடுதே

என் மனதில் உனை மட்டும் கேட்குதே ஏற்குதே

என்றும் உனக்குள்ளே தொலைந்திட… தோனுதடி

 

உன் காதலால் உடைந்தது கர்வம்

மெளனத்தில் மயங்கும் பெண்மணி நானும்

 

தீயென தெரிந்தும் அருகில் வர துணிந்தேனடி

வலியென அறிந்தும் சுகத்தை இதில் உணர்ந்தேனடி

 

நீரை நெருப்பின் அடியில் சுமந்தேனடா

உனக்குள் எழுமோ ஒரு தீச்சுடரா

 

மெய் மறந்து தீயில் மெதுவாய் எறிந்தேன்

விழுந்த இடமே தீயல்ல

நீயென்று பின்பே புரிந்தேன்

 

கள்வனே கள்வனே

காயம் தந்தவள் என்றுமே நானடா

எனினும் என்னைத்தான்

ஒரு முறை பார்த்து சொல்லடா

உயிர்பிழைப்பேன் உன் மடியில்

 

என் காதலால் உடைந்தது நீயும்

இந்த மெளனம் நம்மை கொல்வது ஏனோ

என் ஆசையின் விளைவறியாமல்

உன் மீது உள்ளுள் நான் இழுத்துவிட்டேன்

 

YouTube – Links

Leave a Comment