Vaa En Uyire Song Lyrics in Tamil | Music Video

Vaa En Uyire Song Lyrics

Movie Name Music Video
Song Name Vaa En Uyire
Actors ——
Music Stephen Zechariah
Singers Stephen Zechariah, Srinisha Jayaseelan
lyricist Mohan Rajan
Movie Release date 2024

Vaa En Uyire Song Lyrics in Tamil

எனை கொல்லாமல் கொல்லாதே தாங்காது நெஞ்சம்

என் உயிரெல்லாம் உன்வாசம் தான்மெல்ல வீசும்

 

அட என்சுவாசம் உன்சுவாசம் ஒன்றாக சேரும்

அந்த நொடி போதும் என் ஆசை சொல்லாமல் தீரும்

 

உன் இதழோடு சேர்த்து எனை முழுதாக கோர்த்து

பகல் இரவெல்லாம் பார்த்த்தாலே அது போதுமே

 

உன் விழி ரெண்டும் கூச புது வெட்கங்கள் பேச

எனைபிரியாமல் அணைத்தாலே உயிர் நீளுமே

 

வா என் உயிரே வா என் உறவே

உன்னாலே என் ஜீவன் வாழுதே

 

வா என் உயிரே வா என் உறவே

உன்னாலே என் காதல் வாழுதே

 

உன்னோடு தான் என் மனம் வாழுதே

அது சொல்லாமலே உன் வசமானதே

 

உன்னோடு தான் என் நிழல் போகுதே

என் கண்ணோடு தான் உன் இமை மூடுதே

 

தாலாட்டுட்ம் பார்வை நீ வீச வா

உன் மாரோடு நான் சாய்ந்து தூங்க வா

நான் கேட்கும் பாடல் நீ ஆக வா

என் உயிரெல்லாம் இசையாக சேர வா

 

பெண்ணே அழியாத பேரன்பை நான் காட்டுட்வேன்

உன்னை இழக்காமல் போர் செய்து பரிசாக்குவேன்

உன்கை ரேகை மேல் எந்தன் உயில் தீட்டுட்வேன்

மரணம் நேர்ந்ந்தாலும் உனக்காக உயிர் மீட்டுவேன்

 

வா என் உயிரே வா என் உறவே

உன்னாலே என் ஜீவன் வாழுதே

 

வா என் உயிரே வா என் உறவே

உன்னாலே என் காதல் வாழுதே

 

தீராமலே விழி கதை பேச வா

முகம் பாராமலே உன் மனம் சொல்லவா

 

கண்ணாளனே என் விதி மீற வா

உன் இதழின் வரிகள் வழியே எனை தேட வா

நீயாக மாறும் வரம் வாங்க வா

தினம் கண்ணாடி பார்த்தே நான் வாழவா

 

மருதாணி போல் உன் கை சேரவா

உன் சிவப்பான வெட்கங்கள் பூசவா

 

அன்பே கடிகார எண்ணாக நீ ஆகவே

தினமும் உனை சுற்றும் முள்ளாக நானாகிறேன்

 

நீயும் கடலாக வந்தால் நான் அலையாகிறேன்

உன்னைபிரியாமல் உனக்குள்ளே அலை பாய்கிறேன்

 

எனை கொல்லாமல் கொல்லாதே தாங்காது நெஞ்சம்

என் உயிரெல்லாம் உன் வாசம் தான் மெல்ல வீசும்

 

அட என் சுவாசம் உன் சுவாசம் ஒன்றாக சேரும்

அந்த நொடி போதும் என் ஆசை சொல்லாமல் தீரும்

 

உன் இதழோடு சேர்த்து எனை முழுதாக கோர்த்து

பகல் இரவெல்லாம் பார்த்தாலே அது போதுமே

உன் விழி ரெண்டும் கூச என்கூச்சங்கள் பேச

எனை பிரியாமல் அணைத்தாளே உயிர் நீளுமே

 

வா என் உயிரே வா என் உறவே

உன்னாலே என் ஜீவன் வாழுதே

வா என் உயிரே வா என் உறவே

உன்னாலே என் காதல் வாழுதே

YouTube-Links

Leave a Comment