Vayava Song Lyrics in Tamil (வயவா) | Kattil / கட்டில்

Vayava Song Lyrics

The song “Vayava” is featured in the movie “Kattil”. This is the Second song from Kattil. The song is written by “Madhan Karky”, sung by “Saindhavi, Sathya prakash” and composed by “Srikanth Deva”. The film stars “EV Ganeshpa and Srushti Dange”

Movie Name Kattil / கட்டில்
Song Name Vayava (வயவா)
Actors EV Ganeshbabu, Srusht Dange
Music Srikanth Deva
Singer Saindhavi, Sathya prakash
lyricist Madhan Karky
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Vayava Song Lyrics in Tamil

வயவா! என் வயவா!

 

மறைந்தேன் என நினைத்தாயோ!

பிரிந்தேன் என நினைத்தாயோ!

மறைந்தேன் என நினைத்தாயோ!

பிரிந்தேன் என நினைத்தாயோ!

 

நீளும் நினைவாய் நீங்கா நிழலாய்

நானே வருவதை மறந்தாயோ!

அகலின் ஒளியாய் மகளின் விழியாய்

இன்பம் தருவதை மறந்தாயோ!

 

வயவா! என் வயவா!

ஓர் உண்மை மட்டும் சொல்லவா!

வயவா! என் வயவா!

என் உயிரே நீதான் அல்லவா!

 

மறைந்தேன் என நினைத்தாயோ!

பிரிந்தேன் என நினைத்தாயோ!

மறைந்தேன் என நினைத்தாயோ!

பிரிந்தேன் என நினைத்தாயோ!

 

ஒன்றாய் சிரித்த வருடங்களும்

உடைந்து கிடந்த பொழுதுகளும்

காதல் தவிர எல்லாம் இழந்து

வீதியில் நடந்த நிமிடங்களும்

 

ஒன்றாய் சிரித்த வருடங்களும்

உடைந்து கிடந்த பொழுதுகளும்

காதல் தவிர எல்லாம் இழந்து

வீதியில் நடந்த நிமிடங்களும்

 

இழப்பது எல்லாம் அடைந்திடத்தானென

ஆறுதல் கூறிய வார்த்தைகளும்

அழுவது எல்லாம் சிரித்திடத்தானென

என்னிடம் பேசிய பார்வைகளும்

கனவா? நனவா?

சொல்வாய் வயவா!

 

வயவா! என் வயவா!

ஓர் உண்மை மட்டும் சொல்லவா!

வயவா! என் வயவா!

என் உயிரே நீதான் அல்லவா!

 

முன்னோர் நடந்த வழியினிலே

நானும் அவளும் நடந்ததுவும்

இன்னோர் தடத்தை பதிக்கம் முன்னே

அவளின் பாதம் மறைந்ததுவும்

 

முன்னோர் நடந்த வழியினிலே

நானும் அவளும் நடந்ததுவும்

இன்னோர் தடத்தை பதிக்கம் முன்னே

அவளின் பாதம் மறைந்ததுவும்

 

எனதன்னை தந்தை மகிழ்ந்ததைப் போலவே

அவளுடன் வாழ்ந்திட நினைத்ததுவும்

எமக்கென கண்ட கனவுகள் யாவையும்

ஓர் நொடிப் பொழுதில் நீ உடைத்ததுவும்

அழவா? விழவா? இதுதான் முடிவா?

 

இறைவா! என் இறைவா!

நான் ஒன்றே ஒன்றைக் கேட்கவா!

இறைவா! என் இறைவா!

என் உயரைக் கொஞ்சம் மீட்டு வா

 

மறைந்தேன் என நினைத்தாயா!

அறுந்தேன் என நினைத்தாயா!

காலம் முழுதும் கண்ணீர் எழுதும்

காதல் கதைகளை அறிவாயா?

 

வண்ணம் சிந்தும் மண்ணில் புதைந்தும்

காதல் தொடர்வதை அறிவாயா?

 

வயவா! என் வயவா!

ஓர் உண்மை மட்டும் சொல்லவா!

வயவா! என் வயவா!

என் உயிரே நீதான் அல்லவா!

 

வயவா!

Vayava Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment