Velichandhaan Song Lyrics in Tamil (வெளிச்சந்தான் ) | Irugapatru / இறுகப்பற்று

Velichandhaan Song Lyrics

Movie Name Irugapatru / இறுகப்பற்று
Song Name Velichandhaan (வெளிச்சந்தான்)
Actor Vikram Prabhu, Shraddha Srinath, Vidharth
Music Justin Prabhakaran
Singer Justin Prabhakaran, Padmaja Sreenivasan
lyricist Karthik Netha
Movie Release date 06.10.2023

Velichandhaan Song Lyrics in Tamil

திறந்திடுமா உறவெனும் தாழே

திறந்திடுமா திறந்திடுமா அன்பே அன்பே

 

வெளிச்சந்தான் காணா போகாதே

இருட்டுல காலம் வாழாதே

அமைதியால் விடியுமே

வழியெல்லாம் தெரியுமே

 

ஓ நெஞ்சே எல்லாமே

வா மாறுமே தன்னாலே

நீ சும்மா தேம்பாதே

 

வெளிச்சந்தான் காணா போகாதே

இருட்டுல காலம் வாழாதே

 

யாரிடம் காயம் இல்லை

யாரிடம் சோகம் இல்லை

இன்பமே போகும் என்றால்

அது ஒரு வாழ்க்கை இல்லை

 

பூவிலே வாசம் உண்டு

கூர்மையாய் முள்ளும் உண்டு

முட்களும் சேர்ந்தால் தானே

பூக்களும் வாழும் இங்கு

 

காலம் மாறும் போதே

யாவும் மாறக் கூடும்

நாளும் மாறும் போதே

காலம் கூட மாறும்

 

உலகமே கலக்கமே

அமைதியே விளக்கமே

 

ஓ நெஞ்சே எல்லாமே

வா மாறுமே தன்னாலே

நீ சும்மா தேம்பாதே

 

வெளிச்சந்தான் காணா போகாதே

இருட்டுல காலம் வாழாதே

வெளிச்சந்தான் காணா போகாதே

இருட்டுல காலம் வாழாதே

 

மாபெரும் வானின் கீழே

யாவுமே பாதை தானே

பாதையில் போனால் போதும்

சேர்ந்திடும் ஞானம் தானே

 

பார்வைகள் மாறும் போதே

ஆழமாய் காணும் போதே

காரணம் புரியும் கண்ணே

யாவுமே மாறும் மண்ணே

 

ஊக்கமான காலம்

வானில் வந்து போகும்

ஊக்கம் தீரும் போதே

தூர காட்சி தோன்றும்

 

பனியெல்லாம் விலகுமே

ஒளி நிலா ஒளிருமே

 

ஓ நெஞ்சே எல்லாமே

வா மாறுமே தன்னாலே

நீ சும்மா தேம்பாதே

 

வெளிச்சந்தான் காணா போகாதே

இருட்டுல காலம் வாழாதே

வெளிச்சந்தான் காணா போகாதே

இருட்டுல காலம் வாழாதே

 

YouTube-Links

Leave a Comment