Veyila Thaduthu Song Lyrics in Tamil (வெயில தடுத்து) | Meippada Sei / மெய்ப்பட செய்

Veyila Thaduthu Song Lyrics

Movie Name Meippada Sei / மெய்ப்பட செய்
Song Name Veyila Thaduthu (வெயில தடுத்து)
Actors Aadhav, Balaji, Madhunika
Music Bharani
Singer Senthildass, Anu Anand
lyricist Uma devi
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Veyila Thaduthu Song Lyrics in Tamil

வெயில தடுத்து கொட புடிச்சி

கொடயின் நடுவே இடம் புடிச்சி

உனக்கு தருவேனே! நிழல

உனக்கு தருவேனே!

 

மழைய கொஞ்ச வரவழைச்சி

மாராப்புல அத நனைச்சி

உனக்கு தருவேனே! குளிர

உனக்கு தருவேனே!

 

காதலில் இந்த காதலில்

கருவாடாய் நான் காயுறேன்

 

ஆசையில் அந்த ஆசையில்

மடி மீது நான் சாயுறேன்

 

வெயில தடுத்து கொட புடிச்சி

கொடயின் நடுவே இடம் புடிச்சி

உனக்கு தருவேனே! நிழல

உனக்கு தருவேனே!

 

பெண்ணே! பெண்ணே! பெண்ணே!

நீ பூவாய் சிரிக்கின்றாய்

அட! பொழுதே பொழுதே பொழுதே

திருநாளாய் நகர்கின்றாய்

 

உயிரின் உயிரே! உயிரே!

என் உயிரில் வசிக்கின்றாய்

என் உறவே! உறவே! உறவே!

என்னை முழுதும் சுமக்கின்றாய்

 

காலங்கள் நேரங்கள்

கனவை கூட்டும் ஜாலங்கள்

உன் காதல் தூரங்கள்

கூட்டிப் போகும் மாயங்கள்

 

தவித்தேனே! துடித்தேன!

உனக்கென பிறந்தேன!

உடல் உயிருடன் கலந்தேனே

 

வெயில தடுத்து கொட புடிச்சி

கொடயின் நடுவே இடம் புடிச்சி

உனக்கு தருவேனே நிழல

உனக்கு தருவேனே

 

உன்போல் உன்போல் உன்போல்

அடி யாரும் இங்கில்லை

உன் விழிகள் பேசும் மொழியோ

எம் மொழிக்கும் ஈடுல்லை

 

உயிராய் பேசும் வார்த்தை

வெறும் காமக் கதையல்ல

என் மனதை திருடிப் போனாய்

இது தொடரும் முடிவல்ல

 

வானெங்கும் வானெங்கும்

உன்னை தேடி பறந்தேனே

ஊரெங்கும் ஊரெங்கும்

உன்னை காண அலைந்தேனே!

 

விழுந்தேன! எழுந்தேனே!

மயக்கத்தில் நடந்தேனே!

பெரும் விடுதலை அடைந்தேனே!

Veyila Thaduthu Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment