Poo Naazhi Pon Naazhi Song Lyrics
| Song | Poo Naazhi Poo Naazhi (துளி ஈரம்) |
| Movie Name | Aneethi / அநீதி |
| Actors | Arjun Das, Dushara Vijayan |
| Music | G.V.Prakash Kumar |
| Singer | Sid Sriram |
| lyricist | Ekadasi |
| Movie Release date | 21.07.2023 |
Poo Naazhi Pon Naazhi Song Lyrics in Tamil
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்
தோளேத்தி ஊர் காட்ட போறேன்
நீ விழுதென தாங்கி நிக்கும் போது
உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து
நான் வேருக்கு உரமாவேன்
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
மஞ்ச பாப்பாத்தி கண்ணே நீதான்டா
நெஞ்ச மல்லாத்தி போகும் பூதான்டா
நாக்கு ஊத்தெடுக்கும் வெல்லம் நீதான்டா
தீபம் ஏத்தி வைக்கும் செல்ல தீதான்டா
உன் பாசம் மூட்ட கட்ட சாக்கொன்னு வேணும்
என் ஆச உச்சத்துக்கு ஏன் ராசா போனும்
தேய்பிறையே இல்லையப்பா பிள்ளை வானத்தில்
சேர்ந்திடும் சிந்தும் சோறும் அன்னதானத்தில்
உன் பேச்சில் கொஞ்சக்காடு நனைகிறதே
உன் வாசம் தேடி காத்தும் அலைகிறதே
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்
தோளேத்தி ஊர் காட்ட போறேன்
நீ விழுதென தாங்கி நிக்கும் போது
உனக்கொரு மரமாவேன்
நான் இலையாய் மண்ணில் விழுந்து
நான் வேருக்கு உரமாவேன்
பூ நாழி பொன் நாழி பெத்தா
என் சாமி நீ ஆழி முத்தா
YouTube – Links
Aneethi Other Songs