Thuli Eeram Song Lyrics
| Song | Thuli Eeram (துளி ஈரம்) |
| Movie Name | Aneethi / அநீதி |
| Actors | Arjun Das, Dushara Vijayan |
| Music | G.V.Prakash Kumar |
| Singer | Harish Sivaramakrishnan |
| lyricist | Karthik Netha |
| Movie Release date | 21.07.2023 |
Thuli Eeram Song Lyrics in Tamil
துளி ஈரம் சுரக்காத வாழ்வில்
அரும் தூங்கி வழிகின்ற ஊரில்
ஒரு நீதி தலையேறி ஆடும்
அநீதி
மதயானை அரசாளும் காட்டில்
தனக்கான இடம் தேடும் ஈசல்
கிடைக்காமல் அலை மோதும் சோகம்
அநீதி
யார் நீதி மேலோ யார் நீதி கீழோ
பணம் காசின் கையோங்கும் போது
பசி யாவும் வாழேந்தும் போது
முரண்பாட்டின் மலராக பூக்கும்
அநீதி அநீதி
கானல் நீரோ சிறு ஊற்றோ
மீதிதான் யாதோ
பூவின் காம்பே சீழ் என்றால்
வாசம் தான் கனவோ
விண்மீனோ கண்ணீரோ
மீதிதான் எதுவோ
மானுடம் என்பதே
மாபெரும் தோல்வியோ
எளியவர் வாழும் வாழ்வோ அநீதி
மீன்களின் தேவையோ
தூண்டிலின் ஆசையோ
உயிர் வாழ்தலின் கூத்திலே
யாவுமே கேள்வியோ
கானல் நீரோ சிறு ஊற்றோ
மீதிதான் யாதோ
YouTube – Links
Aneethi Other Songs