Chinna Chinna Murugaiya Song Lyrics in Tamil (சின்ன சின்ன முருகய்யா) | Murugan Bakthi Padalgal

Chinna Chinna Murugaiya Song Lyrics

Name Lord Murugan Song
Song Chinna Chinna Murugaiya (சின்ன சின்ன முருகய்யா)
Singer Sadasivam
Music Sadasivam
Lyrics Sadasivam
Lyrics in தமிழ்

Chinna Chinna Murugaiya Song Lyrics in Tamil

தமிழ் மொழி காத்த

தலைவன் ஐயா!

ஞான பழம் கேட்ட

குழந்தை ஐயா!

 

அப்பனுக்கு பாடம் சொல்லி

ஆறுபடை ஆட்சி செய்யும்

என் சாமி முருகன் ஐயா!

 

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

 

சின்ன சின்ன முருகய்யா!

சிங்கார முருகய்யா!

சின்ன சின்ன முருகய்யா!

சிங்கார முருகய்யா!

 

கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்

செந்தில் வடிவேலன் அவன்

கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்

செந்தில் வடிவேலன் அவன்

 

சின்ன சின்ன முருகய்யா!

சிங்கார முருகய்யா!

கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்

செந்தில் வடிவேலன் அவன்

 

சுப்ரமணிய சாமி என்பார்

கார்த்திகேயன் என்பார்

சுவாமிநாதன் என்பார்

குக அமுதன் என்பார்

பாலசுப்ரமணியன் என்பார்

கருணாகரன் என்பார்

 

கதிர் காம கந்தன் என்பார்

கதிர்வேல சாமி என்பார்

சேனாதிபதி என்பார்

கதிர்வேலன் என்பார்

பரமகுரு என்பார்

முத்துக்குமாரன் என்பார்

 

சூரனை கூறு போட்டவனாம்

சுனாமியை விரட்டி விட்டவனாம்

போகர் கொடுத்த பொக்கிஷமாம்

பஞ்சாமிர்த பிரியனாம்

 

பக்குமலை சாமியாம்

அப்படி பட்ட

முருகன் அவன்

ரொம்ப ரொம்ப சின்னவனாம்

 

சுவாமி

சின்ன சின்ன முருகய்யா!

சிங்கார முருகய்யா!

கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்

செந்தில் வடிவேலன் அவன்

 

தமிழ் செல்வன் என்பார்

சத்குண சீலன் என்பார்

மயூர வாகனன் என்பார்

மருதமலை ஆண்டவன் என்பார்

 

சென்னிமலை சுவாமி என்பார்

சிவன்மலை வேலா என்பார்

ஞான வடிவேலன் என்பார்

வேலாயுத சாமி என்பார்

 

தேவாதி தேவன் என்வார்

கந்த குரு என்பார்

அவ்வையிடம் ஆசி பெற்றவனாம்

அப்பனுக்கே பாடம் சொன்னவனான்

 

கார்த்திகை பெண்ணிடம் வளர்ந்தவனாம்

தேன் தமிழ் காத்த தெய்வமாம்

மயூர வாகனத்தில் வருபவனாம்

சித்தாதி சித்தனாம்

 

சக்தி கவசம் கொண்டவனாம்

அப்படி பட்ட

முருகன் அவன்

ரொம்ப ரொம்ப சின்னவனாம்

 

முருகன்

சின்ன சின்ன முருகய்யா!

சிங்கார முருகய்யா!

கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்

செந்தில் வடிவேலன் அவன்

 

குன்ற குடியான் என்பார்

பழனிமலை நாதன் என்பார்

வடபழனி ஆண்டவன் என்பார்

சரவணன பவன் என்பார்

விமலன் சாமி என்பார்

 

தண்டாயுதபாணி என்பார்

கலியுக வரதன் என்பார்

வெற்றி வடிவேலன் என்பார்

வீர வடிவேலன் என்பார்

மரகத வண்ணன் என்பார்

 

ஞான பழம் கேட்டவனாம்

நம்பினோரை நாடுபவனாம்

காவடி பிரியனாம்

ராஜா அலங்காரன் கொண்டவனாம்

 

ஆண்டியாய் நின்றானாம்

ஆனால் செல்வத்தை

எல்லாம் கொடுப்பானாம்

அப்படி பட்ட

முருகன் அவன்

ரொம்ப ரொம்ப சின்னவனாம்

 

சுவாமி

சின்ன சின்ன முருகய்யா!

சிங்கார முருகய்யா!

கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்

செந்தில் வடிவேலன் அவன்

 

வெற்றிவேல் முருகனுக்கு

 

நெற்றி கண்ணில் பிறந்தவனே!

உன்னை சுத்துதையா

மக்க ஜனம்

 

எட்டுத்திக்கும் தமிழ் காத்த

பேரழகா வாரும் ஐயா

 

சின்ன சின்ன முருகய்யா!

சிங்கார முருகய்யா!

கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்

செந்தில் வடிவேலன் அவன்

 

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

 

சூரனையே வேரறுத்த

சுப்பிரமணி நீதான் ஐயா!

கடல் அலைய விரட்டி விட்ட

செந்தூர் வடிவேலன் ஐயா!

 

சின்ன சின்ன முருகய்யா!

சிங்கார முருகய்யா!

கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்

செந்தில் வடிவேலன் அவன்

 

திண்டாட்டமே இல்லாமலே

மக்க கொண்டாட்டாம வாழ வைக்கும்

பண்டாரமா பழநியில

உலகை நின்றாளும் ஆண்டவனே!

 

சின்ன சின்ன முருகய்யா

கந்தா..

சிங்கார முருகய்யா

முருகா…

கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்

வேலா…

செந்தில் வடிவேலன் அவன்

பாலா…

 

வீரவேல் முருகனுக்கு அராேகரா

 

கந்தன் சஷ்டி கவசம் படி

உன்னை பிடிச்ச பிணி நொறுங்குமடி

கந்தவேலன் கால பிடி

நாம நினைச்சதெல்லாம்

நடக்குமடி

 

சின்ன சின்ன முருகய்யா!

சிங்கார முருகய்யா!

கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்

செந்தில் வடிவேலன் அவன்

 

வா முருகா! வேல் முருகா!

வா முருகா! வேல் முருகா!

வா முருகா! வேல் முருகா!

வெற்றிவேல் முருகனுக்கு

 

வா முருகா! வேல் முருகா!

வா முருகா! வேல் முருகா!

வா முருகா! வேல் முருகா!

அந்த வீர வேல் முருகனுக்கு

அரோகரா அரோகரா

அரோகரா…

Leave a Comment