Kadhalkaari Song Lyrics
Song Name | Kadhalkaari (காதல்காரி) |
Actors | ——- |
Music | EJ Brothers |
Singer | EJ Brothers |
lyricist | EJ Brothers , Nithish Joe |
Movie Release date | 2022 |
Kadhalkaari Song Lyrics in Tamil
எதிர் காற்றோடு கை நீட்டி
அழைக்கின்ற பறவை போல்
நாம்…. எங்கே போகின்றோம்
இங்கு தோழோடு கைபேசும்
பாசைகள் தான் பேசி
ஒருபாடல்…
தாம் கேட்கின்றோம்
ஏன்? என் பின்னே தொடர்கின்றாய்
பேரன்பே தாகமாய்
இங்கு என் காதல் நீ சேர்க்க
வானவில் தீட்டி வா
எந்தன் காதல் கானில் கூறும்
முகவரி காதல் தேசமோ!
அவள் காதில் கேட்க
மாலை மாயை ஏங்கும் ஞாபமோ!
எந்தன் காதல் காதல்காரி
எந்தன் காதல் காதல்காரி
இந்த நேரங்கள் நீளாதோ!
நீ பார்க்க நான் பார்க்க
ஏன்.. மெளனம் பேசாதோ!
உன் காதோரம் கதைக்கின்ற
கார்கூந்தல் கூறாமல்
என் பூகோளத்தில் புனல் பொழியாதோ!
இங்கு உன்னோடு போகின்ற
தூரங்கள் காணாதே!
என் ஏக்கங்கள் தீப்போலே
நீயின்றி தீராதே!
ஓர் இலையின் ஓசை நீ
என் இசையின் நீட்சி நீ
என் பயணத்தேடல் நீ
என் காதல் வானம் நீ
இந்த வானம் தேடும் போகம் நீ
என் வாழ்வின் நீளும் காலம் நீ
எந்தன் காதல் கானில் கூறும்
முகவரி காதல் தேசமோ!
அவள் காதில் கேட்க
மாலை மாயை ஏங்கும் ஞாபமோ!
எந்தன் காதல் காதல்காரி…
எந்தன் காதல் காதல்காரி…
எந்தன் காதல் காதல்காரி…
எந்தன் காதல் காதல்காரி…
Kadhalkaari Song Lyrics in English