Kanjadai Kaattadhadi Song Lyrics in Tamil | Tamil Album Songs

Kanjadai Kaattadhadi Song Lyrics

Movie Name Tamil Album Songs
Song Name Kanjadai Kaattadhadi
Actors —–
Music Dr. Jijo C John
Singers Ajaey Shravan, Sharon Merlina
lyricist Ratchagan
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Kanjadai Kaattadhadi Song Lyrics in Tamil

கண் ஜாடைதான் காட்டாதடி

என்ன மின்சாரமா தாக்காதடி

உன் அடுக்கு பல்லால

நான் அலையுறேன் தன்னால

 

கண்ணா பின்னா ஒ சிரிப்புல

காத்து கெடந்தேன நெனப்புல

 

என் உசுரே நீதாண்டி

என்ன உரசி போயேண்டி

என்ன சொக்க வைக்கும்

சுந்தரியே…

மாமான்னு சொல்வாயா…?

 

என்ன சுத்த விட்டு பாக்குறியே…

பெண்ணே நீ அறிவாயா…?

 

கண் ஜாடைதான் காட்டாதடி

என்ன மின்சாரமா தாக்காதடி

உன் அடுக்கு பல்லால

நான் அலையுறேன் தன்னால

 

பஞ்சி முட்டாய் கண்ணம் காட்டி

வண்ணம் தீட்டி போறவேள

பச்சபுள்ள ஏங்குறேன்டி

பச்சக்கிளி நீ பதில் சொல்லி போடி

 

வானு கோழி மூக்கழகி

வயசு பையன வதைக்காத

பருவ பையன் பாசக்காரன்

புடிச்சிருந்தும் விலகிப்போற

 

ரெட்ட சடை பின்னிப்போகும்

ரெக்கையில்லா குருவி நீ…

பார்த்ததுமே பச்சை குத்தும்

பார்வைய மாத்தேண்டி…

 

கண்ணாலத்தான் கிறுக்கேத்தி

தினம் ஆள கொல்லுறியே

ஏ! பருவ பொண்ணே இனி பார்க்காதடி

நான் பார்வை இல்லாம போய்டுவேன்…

 

சின்ன சின்ன சிணுங்கல் செஞ்சி

சிறை பிடிக்க வந்தவளே…

வெட்கத்துல பாடுறேன்டி

வார்த்த ஒன்னு சொல்லிப்போடி…

 

கெண்ட மீனு கழுத்தழகி

கெறங்கடிச்சி நடந்துப்போற

பண்ணு போல உன்ன தின்ன

பட்டாம் பூச்சியாய் பறந்து வாறேன்

 

சொட்ட சொட்ட நனையிறேன்டி

உன் சுண்டி விட்டல சிரிப்பால

செல்லமாக வையாதடி

தமிழ் சொல்லாக மாறிடுவேன்

 

செல்ல கிளி உன் பேர சொல்லி

இந்த ஊரையே வாங்கிடுவேன்

உன்ன விட்டா யாருமில்ல

இந்த ஒரே ஒரு ஜென்மத்துல…

ஜென்மத்துல…

 

உனக்கா சமஞ்சேன்டா

உன் உசிருக்குள்ள நுழைஞ்சேன்டா

அட நீதான்டா மெல்ல

வந்தாயே உள்ள

 

YouTube – Links

Leave a Comment