Mayakama kalakama Song Lyrics in Tamil (மயக்கமா கலக்கமா) | Sumai Thangi / சுமைதாங்கி

Mayakama kalakama Song Lyrics

“மயக்கமா கலக்கமா” இப்பாடல் வரிகளுக்கு “எம்.எஸ். விஸ்வநாதன்” இசையமைத்து “பி.பி. ஸ்ரீநிவாஸ்” பாட “கவிப்பேரரசு கண்ணதாசன்” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “ஜெமினி கணேசன், தேவி” நடித்து 1962-ல் வெளியான “சுமைதாங்கி” படத்தில் இடம்பெற்றுள்ளது.

மனிதன் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

வாழ்க்கையில் பிரச்சனைகள் ஆயிரம் வரும். வேதனைகள் இல்லா வீடு ஏதும் இல்லை இதனால் மனம் வாடினால் வாழ்வில் முன்னேற முடியாது. அதனால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார்

நாளை நடப்பதை இறைவனிடம் ஒப்படைத்து விட்டு இன்றைய வாழ்வில் அமைதியை தேட வேண்டும்.என இப்பாடலில் கவிஞர் கண்ணதாசன் கூறுகிறார்

Song Mayakama kalakama (மயக்கமா கலக்கமா)
Movie Name Sumai Thangi / சுமைதாங்கி
Actors Gemini Ganesan, Devika
Music M.S. Viswanathan
Singer P.B. Sreenivas
lyricist Kannadasan
Movie Release date 1962

Lyrics in தமிழ்Lyrics in English

Mayakama kalakama Song Lyrics in Tamil

மயக்கமா கலக்கமா!

மனதிலே குழப்பமா!

வாழ்க்கையில் நடுக்கமா!

 

மயக்கமா கலக்கமா!

மனதிலே குழப்பமா!

வாழ்க்கையில் நடுக்கமா!

 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல்தோறும் வேதனை இருக்கும்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல்தோறும் வேதனை இருக்கும்

 

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவது இல்லை

வாடி நின்றால் ஓடுவது இல்லை

 

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

 

மயக்கமா கலக்கமா!

மனதிலே குழப்பமா!

வாழ்க்கையில் நடுக்கமா!

 

ஏழை மனதை மாளிகை ஆக்கி

இரவும் பகலும் காவியம் பாடு

ஏழை மனதை மாளிகை ஆக்கி

இரவும் பகலும் காவியம் பாடு

 

நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து

நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

 

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்து பார்த்து நிம்மதி நாடு

 

மயக்கமா கலக்கமா!

மனதிலே குழப்பமா!

வாழ்க்கையில் நடுக்கமா!

 

மயக்கமா கலக்கமா!

மனதிலே குழப்பமா!

வாழ்க்கையில் நடுக்கமா!

Mayakama kalakama Song Lyrics in English

Mayakama kalakama!

Manadhilae kuzhapamaa!

Vaazhkaiyil nadukamaa!

 

Mayakama kalakama!

Manadhilae kuzhapamaa!

Vaazhkaiyil nadukamaa!

 

Vaazhkai endral aayiram irukum

Vaasal dhorum vedhanai irukum

Vaazhkai endral aayiram irukum

Vaasal dhorum vedhanai irukum

 

Vandha thunbam yedhuvendralum

Vaadi nindral oduvadhillai

Vaadi nindral oduvadhillai

 

Yedhaiyum thaangum idhayam irundhaal

Irudhi varaikum amaidhi irukum

 

Mayakama kalakama!

Manadhilae kuzhapamaa!

Vaazhkaiyil nadukamaa!

 

Mayakama kalakama!

Manadhilae kuzhapamaa!

Vaazhkaiyil nadukamaa!

 

Ezhai manadhai maaligai aakki

Iravum pagalum Kaaviyam paadi

Ezhai manadhai maaligai aakki

Iravum pagalum Kaaviyam paadi

 

Naalai pozhudhai iraivanuku alithu

Nadakum vaazhvil amaidhiyai thedu

Nadakum vaazhvil amaidhiyai thedu

 

Unakum keezhae ullavar kodi

Ninaithu paarthu nimmadhi naadu

 

Mayakama kalakama!

Manadhilae kuzhapamaa!

Vaazhkaiyil nadukamaa!

 

Mayakama kalakama!

Manadhilae kuzhapamaa!

Vaazhkaiyil nadukamaa!

Leave a Comment