Kanavula Vazhuranae Song Lyrics in Tamil | Album song

Kanavula Vazhuranae Song Lyrics

Movie Name Album song
Song Name Kanavula Vazhuranae
Actors VJ Pappu, Ivalnandini
Music Mohan Ram
Singer Sam Vishal
lyricist T. Shanmugapandian
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Kanavula Vazhuranae Song Lyrics in Tamil

பிறந்தது குத்தமா

வளர்ந்தது குத்தமா

கடல் கடந்து வந்து

இங்கு படுற கஷ்டம் தான் மிச்சமா

 

பிறந்தது குத்தமா

வளர்ந்தது குத்தமா

கடல் கடந்து வந்து

இங்கு படுற கஷ்டம் தான் மிச்சமா

 

யார குத்தம் சொல்ல

எனக்கு நானே புத்தி சொல்ல

யார குத்தம் சொல்ல

எனக்கு நானே புத்தி சொல்ல

 

பல வருஷம் ஆச்சே

அட காசு தேடியே

உழச்சு உழச்சு தான்

உடம்பு உருகி போச்சே

இந்த இளமை தொலஞ்சி போச்சே

 

குங்குமத்த வச்சி புட்டு

ராணி போல பாக்க ஆசபட்டு

தாலி கயிறு கூட பிரிக்காம

விட்டு வந்தவன் நான்

 

வீடு வாசலுக்கு மோகப்பட்டு

பத்தே நாளில் வந்தியே நீ

அவளின் நினைவில் நானும்

தினந்தோறும் உருகி கிடக்கிறனே

 

சந்தோஷமா இருக்கலியே

துக்கத்தையும் பாக்கலியே

வேதனைய எடுத்து சொல்ல

பக்கத்துல யாரும் இல்ல

 

காதலுன்னா என்ன சொல்ல

இல்லறம்னா என்ன சொல்ல

எதுவும் அறியாம இப்ப

வாட்சப்பில் வாழ்க்கை நடத்துறனே

 

மனைவியோட வாசம் இல்ல

குழந்தையோட நேசம் இல்ல

விக்கி தவிக்கிறேன்

என் நெஞ்சுக்குள்ள

 

மனைவியோட வாசம் இல்ல

குழந்தையோட நேசம் இல்ல

விக்கி தவிக்கிறேன்

என் நெஞ்சுக்குள்ள

 

அண்ணன் தங்கச்சி அரவணைப்பும்

அம்மாவோட கைசோறும்

அப்பாவோட துணையும்

இங்கு இல்லாம தவிக்குறனே

 

ஊரு போக ஆசபட்டு

பயணச்சீட்டு வாங்கி வந்தேன்

அவ விரும்பியதெல்லாம்

மறக்காம நானும் வாங்கிட்டேன்

 

அம்மாவுக்கு ஒன்னும் வாங்கலையே

அப்பா ஒன்னும் கேக்கலையே

காசு பணம் போதலையே

கடன் கொடுக்க நண்பன் இருக்கானே

 

மீசைக்காரன் தைலத்தையும்

தங்கச் சங்கிலி சேலையையும்

ஆசையாக வாங்கிகிட்டு

பெட்டியில கட்சி வச்சிபுட்டேன்

 

போற வழிய தெரியவில்ல

வந்த கதையும் முடியவில்ல

இளமைய இங்கு தொலைச்சிபுட்டேன்

கனவுல வாழுறேனே

 

போற வழிய தெரியவில்ல

வந்த கதையும் முடியவில்ல

இளமைய இங்கு தொலைச்சிபுட்டேன்

கனவுல வாழுறேனே

 

கனவுல வாழுறேனே

 

YouTube – Links

Leave a Comment